குடும்ப சொத்தில் பெண்களுக்கு உரிமை வழங்கும் சட்டத்தை நீக்கியது மோடி ஆட்சி
குடும்ப சொத்தில் ஆண்களைப்போலவே பெண்களுக்கும் உரிமை வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, 1929இல் செங்கல்பட்டில் நடந்த தமிழ் மாகாண முதல் சுயமரியாதை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1989ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியின்போது அன்றைய முதல்வர் கலைஞர் இதை சட்டமாக்கினார். 2005ஆம் ஆண்டு அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நாடாளுமன்றத்திலேயே குடும்ப சொத்தில் பெண்களின் பங்கை உறுதிப்படுத்தும் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இது ஏற்கெனவே அமுலில் இருந்து வந்த இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தமாகும். இந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு மத்தியில் உள்ள பா.ஜ.க. ஆட்சி தேவையற்ற சட்டங்கள் என்று சுமார் 140 சட்டங்களை நீக்கிவிட்டது. இனி இந்தச் சட்டங்கள் அமுலில் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. 2005ஆம் ஆண்டு நிறை வேற்றப்பட்ட இந்து வாரிசுரிமை திருத்தச் சட்டமும் இதில் இடம் பெற்றிருக்கிறது. பெண்களுக்கு குடும்ப சொத்தில் உரிய பங்கினை உறுதி செய்யும் ஒரு முக்கியமான சட்டத்தை எந்தவித...