Tagged: பெண்களின் புதிய அகராதி

பெண்களின் புதிய அகராதி

பெண்களின் புதிய அகராதி

சமூகத்தைக் கட்டமைப்பதில் மொழியின் பங்கு முக்கியமானது., மொழி கடவுளின் படைப்பல்ல. அது மனிதர்களால் உருவாக்கப்பட்டு, காலம்தோறும் வளர்த்தெடுக்கப்படுவது. ஆணாதிக்கச் சமூகம் மொழியைத் தன் தேவைக்கேற்ப வளர்த்தெடுத்துள்ளது. மொழியில் காணப்படும் பாலினப் பாகுபாடுகள் ஏராளம். அண்ணல், வீரன் போன்ற தமிழ்ச் சொற்களுக்கு இணையான பெண்பால் சொற்கள் கிடையாது. அதுபோல, விதவை, மலடி, வாழாவெட்டி, கற்புக்கரசி, பதிவிரதை, முதிர்கன்னி, மோகினி, அணங்கு போன்ற சொற்களுக்கு இணையான ஆண்பால் சொற்கள் கிடையாது. வைப்பாட்டி, தாசி, வேசி, அமங்கலி, வாயாடி, ஓடுகாலி என்று பெண்களைச் சிறுமைப்படுத்தும் ஆணாதிக்கச் சொற்கள் பல தமிழில் உண்டு. ஆணாதிக்கச் சமூகம் பெண்ணை எப்படிப் பார்க்கிறதோ, அப்படியே அவர்களால் உருவாக்கப்பட்ட மொழியும் பெண்ணைப் பார்க்கிறது. பெண்ணுக்கு உரிய வயதில் திருமணமாகாவிட்டால், அவளை ‘முதிர்கன்னி’ என்று ஏசுகிறது. ஆனால் திருமணமாகாத ஆண், ‘பிரம்மச்சாரி’என்று போற்றப்படுகிறான். பெண், திருமணமாகி கணவனை விட்டுப் பிரிந்து வாழ்ந்தால், ‘வாழாவெட்டி’என்று தூற்றப்படுகிறாள். மனைவியைப் பிரிந்து வாழும் ஆடவனுக்கு இந்த அவச் சொல்...