பூணூல் ரோபோக்கள்
ஜப்பானில் டோக்கியோ நகரில் ‘இடுகாடு – இடுகாட்டில் நடக்கும் இறுதிச் சடங்குகள்’ குறித்து சர்வதேச கண்காட்சி நடந்திருக்கிறது. அப்படி ஒரு கண் காட்சி ஆண்டுதோறும் ஒவ்வொரு நாட்டில் நடக்கிறது. இந்த முறை நடந்தது டோக்கியோ நகரில். கண்காட்சியில் பங்கேற்கும் பார்வையாளர் களுக்கு இறுதிச் சடங்கு குறித்த தொழில்முறை பயிற்சிகள் தரப்படுகிறது. இதில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது புத்தமதச் சடங்கு முறையில் ஜப்பானில் நடக்கும் இறந்தவர்களுக்கான சடங்குகளை ஒரு ‘ரோபோ’ எந்திரம் செய்து காட்டியதுதான். ஜப்பானில் இளைஞர்களைவிட முதியோர் எண்ணிக்கை அதிகம். எனவே இறுதிச் சடங்குகள் நடத்த “அதில் பயிற்சிப் பெற்றவர்கள் எளிதில் கிடைப்பதில்லை என்பதால் அந்நாட்டின் ‘சாப்ட் பேங்க்’ எனும் நிறுவனம், ‘பெப்பர் ரோபோட்’ என்ற இந்த மனித எந்திரத்தை உருவாக்கியிருக்கிறதாம். நமது நாட்டில் கோயிலில் ‘அர்ச்சனை’, ‘கும்பாபிஷேகம்’, வீட்டில் ‘விவாக சுபமுகூர்த்தம்’, ‘கிரகப் பிரவேசங்களை’ நடத்த பிறப்பால் ‘பிராமணன்’ என்ற பிறப்புச் சான்றிதழ் கொண்ட ‘பூணூல் ரோபோக்கள்’ மட்டுமே செய்ய...