Tagged: பூசணிக்காய்

நடுரோட்டில் ஆயுதபூஜைக்கு உடைக்கப்பட்ட பூசணிக்காயால் இளைஞர் பலி

திருச்செங்கோட்டில் 13.10.2016 அன்று நடுரோட்டில் ஆயுதபூஜைக்கு உடைக்கப்பட்ட பூசணிக்காயால் வழுக்கி விழுந்து மூளைச்சிதறி சௌந்தர்ராஜன் எனும் இளைஞன் மரணமடைந்தார். சட்டவிரோதமாக நடு ரோட்டில் பூசணிக்காயை உடைத்து விபத்தை ஏற்படுத்தி உயிர் இழப்பிற்கு காரணமான கடை உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தி திவிக சார்பில் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது. மாநில அமைப்பு செயலாளர் ரத்தினசாமி, மாவட்ட அமைப்பாளர் வைரவேல், திருச்செங்கோடு நகர இளைஞரணி செயலாளர் பிரகாசு,நாமக்கல் மாவட்ட பொருளாளர் முத்துப்பாண்டி ஆகிய தோழர்கள் மனு அளித்தனர்.

‘பூசணிக்காய்’க்குள் புதைந்து கிடக்கும் ஜாதி-மூட நம்பிக்கை!

‘பூசணிக்காய்’க்குள் புதைந்து கிடக்கும் ஜாதி-மூட நம்பிக்கை!

காய்கறிகளில் உடல்நலத்துக்கான சத்துகள் அடங்கியிருப்பதை விஞ்ஞானம் தான் கண்டுபிடித்து அறிவித்தது. அதற்குள் மூடநம்பிக்கைகளையும் ஜாதியையும் பார்ப்பனர்கள் திணித்தார்கள். வீடுகளில் ‘திருஷ்டி’ கழிக்க பூசணிக்காய் கட்டினா லும் அந்த வீடுகள், அதற்கான விபத்து பாதிப்புகளிலிருந்து தப்புவதில்லை. ஆனாலும், மூடநம்பிக்கை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இது குறித்து ‘ஈஷா’ சத்குரு வெளியிட்ட கருத்து இது: கேள்வி: புதுமனைப் புகுவிழா போன்ற பல நேரங்களில் வீட்டின் முன் சாம்பல் பூசணிக்காயைக் கட்டித் தொங்க விடும் பழக்கம் நமது கலாச்சாரத்தில் இருக்கிறது. பூசணிக்காயை ஏன் கட்டுகிறார்கள், அந்தக் காய்க்கு மட்டும் அப்படி என்ன சிறப்பு? சத்குரு: “உணவுகளில் மிகவும் அதிக பிராண சக்திக் கொண்ட சில உணவுகள் உள்ளன. அந்த உணவுகளிலும் மகா பிராண சக்தி கொண்டது சாம்பல் பூசணி. அந்தக் காய் மிக அதிகமான நேர்மறை பிராண சக்தி கொண்டது. எனவேதான், அதை வீட்டு முன் கட்டித் தொங்க விடுகிறோம். புதிய வீட்டில் குடியேறும் போது,...