‘தீபாவளி’ புனிதமா? வணிகமா?
இந்து மதப் பண்டிகையில் ஒன்றான தீபாவளி கொண்டாட்டம் தேவையா? இந்தத் தீபாவளி கதை – தமிழர்களை அழித்தொழித்ததைக் கொண்டாடச் சொல்லும் கதை என்பது ஒன்று. இதையும் தாண்டி இதில் அடங்கியுள்ள கேடுகள் என்ன? உயிருக்கு ஆபத்தான நச்சுகளைக் கொண்டு தயாரிக்கப்படும் பட்டாசு தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அந்த பிஞ்சுக் கரங்கள் வெந்து, நோய்களை சுமந்து வாழ்க்கையை தொலைக் கின்றன. பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு இல்லை. வெடி விபத்துக்குள்ளாகி, ஆண்-பெண் தொழிலாளர்கள் உயிர்ப்பலி ஆகிறார்கள். வணிக நிறுவனங்கள் இந்தப் பண்டிகையை நுகர்வோர் கலாச்சாரமாக்கி பொருள்களை வாங்கிக் குவிக்கத் தூண்டுகின்றனர். தள்ளுபடிகள் அறிவிக்கப்படுகின்றன. எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் சொன்ன ‘மகாவிஷ்ணு’, தள்ளுபடி விலையில் மிக்சி, கிரைண்டர், குளிர்சாதனப் பெட்டிகள், 4ஜி அலைபேசிகளை வாங்கச் சொன்னாரா? இது மதத்தின் புனிதமா? வர்த்தகத் தந்திரமா? புரிந்து கொள்ளுங்கள். மதம், வர்த்தக சந்தையுடன் இணைக்கப்பட்டுவிட்டது. எனவே மதப்பண்டிகை ‘வர்த்தகத் திருவிழா’ என்ற வடிவமெடுத்துள்ளது. இனி ‘நரகாசுரனை’ கொன்ற...