Tagged: புத்த தம்மம்

புத்த தம்மம் X வர்ண தர்மம்

புத்த தம்மம் X வர்ண தர்மம்

‘‘இந்துக்களுடைய வாழ்வியலை ராமன் பிறந்த நாள், கிருஷ்ணன் பிறந்த நாள் மற்றும் காந்தி பிறந்த நாளைக்கொண்டாடுவதன்மூலம்தூய்மைப்படுத்திவிட முடியாது. ராமன், கிருஷ்ணன், காந்தி ஆகிய மூவருமே பார்ப்பனியத்தை வழிபடுபவர்களே. ஜனநாயகத்தை நிலைநிறுத்த அவர்கள் ஒருபோதும் பயன்பட மாட்டார்கள். ஜனநாயகத்தை நிர்மாணிக்க புத்தர் மட்டுமே பயன்படுவார். எனவே, புத்தரை நினைவு கூர்வது மிகவும் முக்கியமானது. அவரது மாமருந்தே இந்துக்களின் அரசியல், சமூக நீரோட்டத்தில் கலந்துள்ள மாசுபாடுகளைத் தூய்மையாக்கும்.’’ இந்திய மக்கள் திருவிழாக்களை விரும் புகிறார்கள் என்பதைச் சொல்லத் தேவை யில்லை. அவர்கள் ஆண்டின் பாதி நாட்களை திருவிழா கொண்டாட்டங்களுக்கும் மதச் சடங்குகளுக்குமே செலவிடுகின்றனர். மாமனிதர் களின் பிறந்த நாள் மற்றும் இறந்த நாள் நிகழ்வுகளுக்கும் அவர்கள் அதிகளவு முக்கியத் துவம் கொடுக்கிறார்கள். கிருஷ்ண ஜென் மாஷ்டமி, ராமநவமி மற்றும் அனுமான் ஜெயந்தி ஆகிய கொண்டாட்டங்கள் இந்துக்களின் மனநிலைக்குச் சான்றாக விளங்குகின்றன. இந்திய மக்கள் கொண்டாட்டங்களை அதிகம் விரும்பினாலும் புத்தர் பிறந்த நாளை அவர்கள் இதே...