Tagged: பில்லி சூன்யம்

‘பேய்’ உண்டா? சவால் விட்டவர்கள் ஓட்டம்

திருச்சி மாவட்டம் தாத்தையங்கார் பேட்டை ஒன்றியம் கோளம்பட்டி கிராமத்தில் சோழ ராஜா கோயில் இருக்கிறது. ஆடி மாதத்தில் மூன்று நாள்கள் நடக்கும் இந்தக் கோயில் திருவிழாவில் கொடூரமான சித்திரவதைகள் அரங்கேறுகின்றன. பேய் பிடித்ததாகக் கூறப்படும் பெண்களைக் கொண்டு வந்து  நிறுத்தி, முகத்தில் தண்ணீரைத் தெளித்து, சாம்பிராணி புகைப்போட்டு, ‘உனக்கு பேய் பிடித்திருக்கிறது. அது எந்த ஊர் பேய்?” என்று  கேட்டு சாட்டையால் இரத்தம் சொட்ட சொட்ட அடிக்கிறார்கள். அடி தாங்க முடியாத பெண்கள், ‘பேய் ஓடி விட்டது’ என்கிறார்கள். அந்தப் பெண்ணின் தலை முடியை எடுத்து ஓர் ஆணியில் சுற்றி அப்பகுதி புளிய மரத்தில் அடிக்கிறார்கள். பேயைப் பற்றி காசார் பிரைட் என்ற பிரிட்டனைச் சார்ந்தவர் ஓர் ஆய்வை நடத்தினார். 800 வருட பழமையான பங்களா ஒன்றில் ‘பேய் பிசாசு’ பிடித்தவர்கள் என்று கூறப்பட்டவர்களை கொண்டு போய் தங்க வைத்து, அவர் ஆய்வு செய்தார். குறிப்பிட்ட இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது  வழக்கத்துக்கு அதிகமான ‘காந்தப்...

மகாராஷ்டிராவில் பில்லி சூன்ய மூடநம்பிக்கைகள் குற்றமாகிறது!

மகாராஷ்டிராவில் பில்லி சூன்ய மூடநம்பிக்கைகள் குற்றமாகிறது!

மூடநம்பிக்கைகளுக்கு எதிரான மசோதா, மராட்டிய சட்டமன்றத்தில் டிசம்பர் 13 ஆம் தேதி நிறைவேறியது. நரபலி தருவது, பில்லி சூன்யம் மந்திரிப்பது, நோய் தீர்க்க மூடநம்பிக்கைகளைப் பயன்படுத்துவது உள்ளிட்ட மூடநம்பிக்கைகள் தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா, மகாராஷ்டிர மேலவையில் அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படும். பகுத்தறிவாளர் நரேந்திர தபோக்கர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவரது நினைவாக அவசர சட்டமாக – இதை மகாராஷ்டிர அரசு பிறப்பித் திருந்தது. இப்போது சட்டசபையில் சட்டமாக்கப்பட்டுள்ளது. சட்டத்தில் குறிப்பிட்ட மூடநம்பிக்கைகளில் ஈடுபடுவோருக்கு 6 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை தண்டனை வழங்க சட்டம் வகை செய்கிறது. மசோதா குரல் ஓட்டின் மூலம் நிறைவேற்றப்பட்டது. பாரதிய ஜனதா, சிவசேனா போன்ற இந்து மத அமைப்புகள் இந்த மசோதாவில் ஏராளமான திருத்தங்களைக் கொண்டுவந்தன. அதில் பெரும்பாலான திருத்தங்களை மாநில அரசு ஏற்றுக் கொண்டது. இதன்படி, சோதிடம், வா°து சா°திரம் போன்ற மூடநம்பிக்கைகள், மசோதாவிலிருந்து விலக்கப்பட்டுவிட்டன. மசோதாவை அறிமுகம் செய்து பேசிய...