Tagged: பிராத்தனை

அறிவியல் வழியாக நிரூபணம் ‘பிரார்த்தனை’  எந்தப் பயனும் தராது

அறிவியல் வழியாக நிரூபணம் ‘பிரார்த்தனை’ எந்தப் பயனும் தராது

‘எனக்காக – எனது நோய் தீர்வதற்காக பிரார்த்தனை செய்யுங்கள்’ – இது நோயாளிகளைப் பார்க்க வருவோரிடம் நோயாளிகள் வைக்கும் கோரிக்கை. “செய்ய வேண்டிய சடங்குகளை எல்லாம் செய்து முடித்து விட்டோம்; இனி நம் கையில்  எதுவும் இல்லை; எல்லாம் ஆண்டவனிடம் தான்” – இதுவும் வழக்கமாக கேட்கப்படும் உரையாடல்கள். பல மருத்துவர்கள் – அறுவை சிகிச்சையை முடித்த பிறகு, “சிகிச்சை வெற்றி பெற்றுவிட்டது; ஆனாலும் இறுதி முடிவு ஆண்டவனிடம்தானே!” என்று கூறுவது அவர்களுக்கான பாதுகாப்பு. அறுவை சிகிச்சை தோல்வி அடைந்து விட்டால் பழியை ஆண்டவன் மீது போட்டு தப்பித்துக் கொள்ளும் தந்திரம்தான்! ‘பிரார்த்தனை’யால் நோய் தீருமா? ‘பிரார்த்தனை’யால் பலன் கிடைக்குமா? ‘பிரார்த்தனை’ என்பது ஒரு மூட நம்பிக்கைதான். பிரார்த்தனைகளில் நம்பிக்கை உள்ள குடும்பங்களுக்கு கடவுள் ஏன் நோயைத் தரவேண்டும்? நோயைத் தராமலே இருந்திருக்கலாம் அல்லவா? கடவுள் நோயைத் தருவார்; பிறகு அதைத் தீர்க்க அதே கடவுளிடம் ‘பிரார்த்தனை’ செய்ய வேண்டும் என்றால்,...