Tagged: பிடல் காஸ்ட்ரோ

கடந்து வந்த புரட்சிப் பாதை!

கியூபா மக்களை யும் இயற்கையையும் நேசித்த உண்மையான கம்யூனிஸ்ட்டான ஃபிடல் காஸ்ட்ரோ, 90ஆவது வயதில் காலமான செய்தி, சமத்துவம்- சுதந்திரத்தை விரும்பும் உலக மக்களின் இதயத்தில் இடியாக இறங்கியது. பொருளாதார சமத்துவத்தையும் ஏழைகள் இல்லா கியூபாவையும் உருவாக்கி, அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மாற்றிட அயராது உழைத்த காஸ்ட்ரோவின் மூச்சு நின்ற செய்தி, அந்நாட்டு மக்களிடையே மட்டுமல்ல… உலக நாடுகள் பலவற்றிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. 1945இல் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தபோது உயர்கல்வியை முடித்திருந்த காஸ்ட்ரோ, ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். இங்குதான் காஸ்ட்ரோவுக்கு கம்யூனிசத்தின்மேல் அளவற்ற காதல் ஏற்பட்டது. ஹவானா பல்கலைக்கழகம்தான் காஸ்ட்ரோவின் இதயத்தையும் மனதையும் திறந்து அவரை ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் ஆக்கியது. அதே பல்கலைக் கழகத்தில் ஒரு சில மாணவர்கள் ஒரு வேளை உணவுக்குக் கஷ்டப்படும்போது, வேறு சிலரோ சுகபோகத்தில் திளைத்திருப்பதைக் கண்டு மனம் வெதும்பினார். அமெரிக்க நிறுவனங்களின் ஆக்கிரமிப்புக் குறித்து அப்போதைய அதிபரான பாடிஸ்டாவிடம் அவர்...

தலையங்கம் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம்!

கியூபாவில் புரட்சிகர ஆயுதப் போராட்டம் வழியாக அங்கே நடந்த பாடிஸ்டாவின் சர்வாதிகார ஆட்சியை தூக்கி எறிந்து சோஷலிச ஆட்சியை நிறுவிய ஃபிடல் காஸ்ட்ரோ 90ஆம் வயதில் நவம்பர் 26 அன்று முடிவெய்தினார். கூப்பிடும் தூரத்திலுள்ள நாடு அமெரிக்கா. கியூபாவுக்கும் அமெரிக்காவுக்கும் உள்ள தூரம் 150 கிலோ மீட்டர் தான். ஆனாலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்ற அவரை அமெரிக்காவால் வீழ்த்த முடியவில்லை. பொருளாதாரத் தடைகள்; ஆட்சிக் கலைப்பு சதித் திட்டங்கள்; காஸ்ட்ரோவைக் கொல்ல சதி என அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டது அமெரிக்கா. காஸ்ட்ரோவைக் கொல்ல அமெரிக்க உளவு நிறுவனம் 638 முறை சதித் திட்டம் தீட்டி தோற்றதாக செய்திகள் கூறுகின்றன. ‘சோஷலிசம் அல்லது மரணம்’ என்ற முழக்கத்தை அவர் முன் வைத்தார். அவரது ‘சோஷலிசம்’ – இனவெறி எதிர்ப்பு, கல்வி வளர்ச்சி, சமூக மேம்பாடு என்ற சமுதாய சமத்துவக் கண்ணோட்டத்தை முதன்மைப் படுத்தியது. இதுவே அவர் முன்மொழிந்த சோஷலிசத்தின் தனித்துவம். உயர்கல்வியை...