Tagged: பாவலரேறு பெருஞ்சித்திரனார்

பெரியார் மறைவு – தலைவர்கள் இரங்கல் தொகுப்பு

பெரியார் இறந்த போது பல தலைவர்களும் பத்திரிக்கைகளும் வெளியிட்ட இரங்கல் செய்தியை ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் தென்மொழி இதழில் சுருக்கமாக தொகுத்து வெளியிட்டார். கடைசியில் அவர் ஆசிரியர் குறிப்பாக எழுதியது முக்கியமான ஒன்று. பெரியார் மறைவுக்குப் பின்னர் அவரைப் பற்றிய பலரின் கருத்துரை * கவர்ச்சி மிக்கத் தலைவர். எப்பொழுதுமே போராடியவர் – குடியரசுத் தலைவர் வி.வி.கிரி. * ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்துகளை எதிர்த்து அறைகூவி நின்றவர் அவர் – தலைமை அமைச்சர், இந்திராகாந்தி * நாடு மாபெரும் புரட்சியாளரை இழந்து விட்டது. வாழ்க்கை முழுவதும் இந்து குமுகாயத்தில் புரட்சியான மாறுதலை உண்டாக்கியவர் பெரியார் – நடுவணரசு அமைச்சர். செகசீவன்ராம். * இடைவிடாமல் சாதிக் கொடுமைகளையும், மூட நம்பிக்கைகளையும் எதிர்த்துப் போராடிய வீரர் – நடுவணரசு அமைச்சர். சி.சுப்பிரமணியம் *ஈ.வெ.இரா. ஆர்வமிக்க குமுகாயச் சீர்திருத்தக்காரர் – தமிழக ஆளுநர். கே.கே.சா. *குமுகாயச் சமநிலைக்காக அரும்பாடுபட்ட பெரியாரைத் தமிழகம் என்றும் மறக்காது –...

‘துக்ளக்’ சோவின் இனப்பற்று; படம் பிடிக்கிறார், பாவலரேறு பெருஞ்சித்திரனார்

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 1973ஆம் ஆண்டு ‘தென்மொழி’ ஏட்டில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி: ‘இராசாசி நினைவாலயத்துக்கு’ இவர்கள் தரும் விளம்பரம், காந்திக்குக் கூடத் தந்ததில்லை. ‘தமிழகத்தில் இராசாசி காலடிப்பட்ட இடங்களை யெல்லாம் புண்ணியதலமாகக் கருத வேண்டும்’ என்று ‘சுதந்திர’க்கட்சி சா. கணேசன் வெளிப்படுத்திய கருத்தை இவர்கள் மிகப் பெருமையுடன் வெளி யிட்டுக் கொண்டனர். (சா. கணேசன் மூளையில் இவ்வளவு அடிமைத்தனம் புகுந்திருக்கக் கூடாது) துக்ளக்கில் ‘சோ’ இவர்கள் இனத் தலைவர் இராசாசியைப் பற்றி இப்படி எழுதி யிருந்தார்: “இராசாசியைப் பாராட்டுவதற்கோ அல்லது அவரிடம் குற்றம் காண் பதற்கோ அவருக்கு நிகரானவர்கள் யாரும் இந்நாட்டில் இல்லாமல் போய் விட்டார்கள்… மனம், சிந்தனை, வாக்கு, செயல் எல்லாவற்றிலும் பரிபூரணத் தூய்மையுடன் விளங்கிய ஒரு அசாதாரணமான மனிதரை மிகச் சாதாரணமாக மதித்துவிட்ட மடத் தனத்தின் விளைவுகளிலிருந்து இந்த நாடு என்று விடுபடுமோ தெரியாது… இராசாசி தெய்வ நம்பிக்கை மிகுந்தவர். அந்த ஒரு கரணியத்திற்காகவாவது அவர் வாழ்ந்த...