Tagged: பால்ய விவாகம்

‘பால்ய விவாகம்’: அன்றும் இன்றும்!

பார்ப்பனியம் சமூகத்தில் திணித்த பல கொடுமைகளில் ‘பால்ய விவாகம்’ என்ற குழந்தைத் திருமணமும் ஒன்று. 5 வயது, 6 வயதிலேயே திருமணம் செய்யும் கொடுமை பார்ப்பனர்களால் திணிக்கப்பட்டது. பார்ப்பனக் குடும்பங்களில் இது அதிகம் நடந்தது. இதனால் பெண் குழந்தைகள் மரணமும் இளம் விதவைகள் எண்ணிக்கையும் அதிகரித்தது.  “பெற்றோர்களும் தாங்களாகவே முன் வந்து திருமண  வயதை உயர்த்த உறுதி ஏற்கவேண்டும்” என்று, பூனா பார்ப்பனரும், ‘சீர்திருத்தவாதி’யுமான ராணடே வேண்டுகோள் விடுத்தார். இந்து தர்ம சாஸ்திரங்களில்  அதற்கு இடமில்லை என்று சங்கராச்சாரிகளும் வைதீகப் பார்ப்பனர்களும் மறுத்து விட்டனர். திருமண வயதை உயர்த்தி சட்டம் போடுவதைத் தவிர வேறு வழியில்லை  என்று பிரிட்டிஷ் ஆட்சி முயற்சித்தபோது சுதந்திரப்  போராட்ட வீரராக சித்தரிக்கப்பட்ட மராட்டிய பார்ப்பனர் திலகர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.  “நமது சமூகப் பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளை ஒழுங்குபடுத்தும் வேலையில் அரசாங்கம்  இறங்குவதை நாங்கள் விரும்பவில்லை” என்று தான்  நடத்தி வந்த ‘மராட்டா’ பத்திரிகையில் எழுதினார். அப்போது குஜராத்தைச்...

பால்ய விவாகம்’; அய்.நா. எதிர்ப்பு

பால்ய விவாகம்’; அய்.நா. எதிர்ப்பு

பார்ப்பனியம் – சமூகத்தில் திணித்த பல்வேறு கொடுமைகளில் ஒன்று ‘பால்ய விவாகம்’ அதாவது குழந்தைத் திருமணம். பார்ப்பனர்கள், உயர்ஜாதிக் குடும்பங்களில் பிற ஜாதியினருடன் ஜாதிக் கலப்பு நிகழ்ந்து விடக்கூடாது என்பதற் காகவே இந்தக் கொடூரமான முறையைத் திணித்தனர். இந்த சமூகக் கொடுமை பல்வேறு நாடுகளில் பரவி யுள்ளது. இந்தக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க அய்க்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழு தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. குழந்தைத் திருமணங்கள் பெருமளவு நடைபெறும் எத்தியோப்பியா, தெற்கு சூடான், சிரியா, ஏமன் உள்ளிட்ட 107 நாடுகள் இத் தீர்மானத்தை ஆதரித்துள்ளன. ஆனால், இந்தியா இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க மறுத்துவிட்டது. உலகம் முழுதும் நடக்கும் 6 கோடி குழந்தை திருமணங்களில் 40 சதவீதம், அதாவது 2.4 கோடி குழந்தைத் திருமணங்கள் இந்தியாவில் தான் நடக்கின்றன. இந்தியாவில் இந்த பால்ய விவாகம் சட்டத்தை மீறி பரவலாக நடந்து வருகிறது. அய்.நா. தீர்மானத்தை இந்தியா ஆதரித்தால் இந்தியா,...