Tagged: பாலமலை மருத்துவ முகாம்

பாலமலை மருத்துவ முகாம் 18052016

18.05.2016 அன்று பாலமலை பெரியாரியல் பயிற்சி முகாமையொட்டி இராமன்பட்டி கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக நடைபெற்றது. திருமதி. விஜயா சரவணன் (பாலமலை ஊராட்சித் தலைவர்) தலைமையில் பூச்சியப்பன் (ஊர்ப்பட்டகாரர்), சதீசு (துணைத் தலைவர், பாலமலை ஊராட்சி), மாதப்பன் (ஊர்க் கவுண்டர்) ஆகியோரின் முன்னிலையில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். சுமார் 100க்கும் மேற்பட்டபொதுமக்கள் இம்மருத்துவ முகாமில் பயனடைந்தார்கள். முகாமில் பங்குபெற்ற மருத்துவர்கள்: மருத்துவர் முரளி கிருஷ்ண பாரதி, மருத்துவர் வ.ப.வீரமணி, இவர்களுக்கு உதவியாக திருமதி சூர்யா, இரா.விஜயகுமார் தார்காடு, இலக்கம்பட்டி குமார் மற்றும் அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி ஆகியோர் செயல்பட்டனர். (முகாம் காலை 9:30 மணிக்கு துவங்கி மதியம் 1:30 மணி வரை நடைபெற்றது)