‘கார்ப்பரேட்’ மயமாகும் பார்ப்பனிய திருமண முறை
பார்ப்பனியம் – பன்னாட்டு கார்ப்பரேட் பண்பாட்டுடன் கைகோர்த்துக் கொண்டு தன்னை மீட்டுருவாக்கம் செய்து வருகிறது என்பதற்கு திருமண முறைகளில் நிக ழ்ந்து வரும் மாற்றங்களே சான்று. புரோகிதம் – சோதிடம் – வரதட்சணை என்ற பார்ப்பனிய திருமணம், ஆடம்பர திருமணமாகி, கார்ப்பரேட் நிக ழ்வாகி நிற்பதை விளக்குகிறது, இக்கட்டுரை. இந்தியாவில் ஒரு திருமணத்துக்கு ரூ. 5 லட்சம் முதல் ரூ. 5 கோடி வரை செலவிடப்படுகின்றன. சுமார் மூன்று மாதம் முதல் ஒரு ஆண்டு வரையிலும் திருமண திட்டமிடல் நீள்கிறது. இவற்றின் பின்புலமாக திருமணத்தை பார்க்கிறோம் என்றால் மிகப் பெரிய தொழில் வாய்ப்புகளையும், பணப் புழக்கத்தையும் இந்திய திருமணங்கள் கொண்டிருக்கின்றன என்கிற உண்மை விளங்கும். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் தோராயமாக 1 கோடி திருமணங்கள் நடக்கின்றன. ஒப்பீட்டளவில் ஆண்டுக் காண்டு திருமண செலவுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனடிப்படையில் பார்த்தால் தற்போது இந்திய திருமண சந்தை சுமார் 2,00,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பை கொண்டுள்ளது. இது...