இங்கர்சால் கூறிய பாதிரியார் கதை
வியாதிகளுக்கு ஆவிகளும், பேய் களுமே காரணம் என்று ஒரு காலத்தில் மக்கள் மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கிடந்தார்கள். ‘அம்மை நோய்’ வந்து விட்டால் ‘மாரியாத்தா’ உடலுக்குள் குடியேறியிருக்கிறாள் என்று நம்பி சிகிச்சை தர மாட்டார்கள். ‘மாரியம்மாள் தாலாட்டு’ புத்தகத்தை நோயாளிகள் அருகில் உட்கார்ந்து படிப்பார்கள். ‘ஆத்தா முத்துப் போட்டிருக்கிறாள்’ என்பார்கள். வேப்பிலை களை பறித்து படுக்கைக்கு அருகே போடுவார்கள். சிகிச்சை அளிப்பது ‘பாவம்’ என்று நம்பினார்கள். ‘பெரியம்மை’ என்பது ஒரு கடுமையான நோய்க் கிருமியின் தொற்று. சிகிச்சை இல்லாமையினால் ஏராளமான இறப்புகள் நடந்தன. அதற்குப் பிறகுதான் ஆட்சியாளர்கள் தலையிடத் தொடங் கினார்கள். உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்க முன்வந்தபோது அதை மக்கள் ஏற்க மறுத்த நிலையிலும் உயிர் ஆபத்துகள் குறித்து விளக்கி பரப்புரை செய்யும் நிலை உருவானது. ‘பெரியம்மை’ ஒழிப்புக்காகவே தனி சுகாதாரத் துறை உருவாக்கப்பட்டு ஊழியர்களும் நிய மிக்கப்பட்டனர். தொடர்ச்சியான இயக்கங் களுக்குப் பிறகு ‘மாரியாத்தா’ மூட நம்பிக்கை முற்றாக முடிவுக்குக்...