தலையங்கம்: முதலமைச்சரின் கண்துடைப்பு அறிவிப்பு
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் நிர்ணயித்த 60 சதவீத மதிப்பெண் நிர்ணயத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பல மாதங்களாக சமூக நீதி அமைப்புகள், இயக்கங்கள் வலியுறுத்தி வந்தபோதும், அதை மதிக்காமல் ‘கேளாக் காதுடன்’ இருந்த முதலமைச்சர் ஜெயலலிதா, இப்போது 5 சதவீத மதிப்பெண் தளர்த்தப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவித்திருக்கிறார். ஒவ்வொரு மாநில அரசும் தகுதித் தேர்வு மதிப்பெண் நிர்ணயிப்பை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு குறைத்துக் கொள்ளலாம் என்று தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் கூறியிருந்தாலும்கூட, முதலமைச்சர் அந்த உண்மையை மறைக்கவே துடித்தார்; பழியை தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் மீது தூக்கிப் போட்டார். அந்த அமைப்பு நிர்ணயித்த மதிப்பெண்ணைத்தான் தமிழக அரசு பின்பற்றுகிறது என்றார். ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 69 சதவீத இடஒதுக்கீட்டை தமது ஆட்சி பின்பற்றி வருவதாக – ஏதோ, தமிழ்நாட்டு மக்கள் விவரம் தெரியாதவர்களாகக் கருதிக் கொண்டு...