Tagged: பராசக்தி

ஆச்சாரியார் அரசுக்கு குவிந்த புகார் மனுக்கள் கலைஞரின் பராசக்தி உருவாக்கிய புயல்! எம்.எஸ்.எஸ்.பாண்டியன் (தமிழில் வீ.எம்.எஸ்.சுபகுணராஜன்)

(கலைஞர் -சட்ட மன்றத்தில் 60 ஆண்டுகள் பணியாற்றியுள்ள சாதனை 94ம் அகவையில் அடி எடுத்து வைக்கும் அவரது நீண்ட பொதுவாழ்வு குறித்து தமிழினம் பாராட்டி மகிழும் நிலையில் கலைஞரின் திரைக்கதை வடிவத்தில் உருவாகிய 1952ல் வெளிவந்த ‘பராசக்தி’ திரைப்படம் சந்தித்த எதிர்ப்புகளை ஆழமாக பதிவு செய்யும் கட்டுரை இது. இளைய தலைமுறைகளுக்கு திராவிடர் இயக்கங்கள் சந்தித்த எதிர் நீச்சல் களையும் அக்காலத்தில் நிலவிய சமூக சூழலையும் உணர்த்துகிறது இந்த ஆய்வு கட்டுரை; கட்டுரையின் முதல்பகுதி.) 1952ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், அன்றைய ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் பிரதமர் சி.ராஜகோபாலாச்சாரிக்குத் ‘தமிழன்” என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒருவரிடமிருந்து நாளிடப்படாத கடிதம் ஒன்று வந்தது. கவனமாகத் தேர்வு செய்யப்பட்ட ‘தமிழன்” என்னும் புனை பெயரில், கடிதம் எழுதியவர் தன் நிஜ உலக அடையாளத்தை மறைத்துத் தமிழினத்தின் பிரதிநிதியாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். அக்கடிதம் அக்டோபர் 17, 1952 தீபாவளி தினத்தன்று தி.மு.க கொள்கைகளின்...