Tagged: நேருக்கு நேர்

சேனல் எடமருகுவிடம் தோற்றோடிய பார்ப்பன பண்டிதர்

2012 மார்ச் 5ஆம் தேதி இந்த சம்பவம் நடந்தது. மும்பை புற நகர் பகுதியான ‘இர்லா’வில் வேளாங்கண்ணி  மாதா தேவாலயம் ஒன்று இருக்கிறது. அதன் வாயிலில் ஏசு சிலுவையில் அறையப்படும் சிலை ஒன்று உண்டு. அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஒரு பெண், அந்த சிலுவை சிலையில் கால் பகுதியிலிருந்து தண்ணீர் சொட்டு வதை பார்த்தார். உடனே கூட்டத்தைக்  கூட்டி சிலையின் காலடியில் தண்ணீர் வடிகிறது என் கூறினார். அந்தப் பெண் கிறிஸ்துவப் பெண் அல்ல. ஒவ்வொரு நாளும் கூட்டம் திரளத் தொடங்கி விட்டது. ‘ஏசு சிலையின்  அற்புதம்’ என்று பிரச்சாரம் கட்டவிழ்க்கப்பட்டது! (இதே போல் நாடு முழுதும் ஒருநாள் பிள்ளையார் சிலை பால் குடிப்பதாக ஒரு புரளி கிளப்பப்பட்டது. பின்னர் அறிவியல் வழியில் ‘அது அதிசயம் அல்ல’ என்று நிரூபிக்கப்பட்டது. (பால் குடித்த விநாயகர், அதை எப்போது சிறுநீராக வெளியேற்றினார் என்ற பகுத்தறிவாளர் கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.) ‘ஏசு சிலையின் காலடியில் தண்ணீர்  சொட்டுகிறது’...

இருவர் தூக்கிலிடுவதை தடுத்து நிறுத்திய மகேஸ்வேதா தேவி : 90ஆம் வயதில் முடிவெய்தினார்

பழங்குடி மக்களுக்காக போராடியவரும், அவர்கள் வாழ்க்கை பார்ப்பன உயர் ஜாதியினர் திணித்த மூடநம்பிக்கைகளால் எப்படி சுரண்டப்படுகிறது என்பதை இலக்கியங்களாக எழுதி குவித்தவருமான மகேஸ் வேதாதேவி 90 ஆம் வயதில் கொல்கத்தாவில் முடிவெய்தினார். 120 நூல்களை அவர் எழுதியுள்ளார். ஞானபீடம் ‘பத்மவிபூஷன்’ உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றவர். ஆந்திர மாநிலத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு இளைஞர்களின் தூக்குத் தண்டனையை நிறுத்திய பெருமை இவருக்கு உண்டு. குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவிடம், அவர் ‘ஞான பீட விருது’ பெறும் நிகழ்ச்சிக்கு அடுத்த நாள் விடியற்காலை ஆந்திர மாநிலம் இராஜமுந்திரி சிறையில் இரு இளைஞர்கள் தூக்கிலிட நேரம் குறிக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே அவர்களின் கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. இந்த நிலையில் ‘ஞான பீட விருது’ பெறும் மேடையில் விருதைப் பெறுவதற்கு முன் குடியரசுத் தலைவரிடம் ஒரு கோரிக்கை மனுவை திடீரென வழங்கினார், மகேஸ்வேதா தேவி. அடுத்த நாள் விடியற்காலைதூக்கிலிடப்படவிருக்கும் இரு இளைஞர்களின் தூக்குத் தண்டனையை...

சவால் விட்ட பூரி சங்கராச்சாரியை ஓட வைத்த அக்னிவேஷ்

கணவன் இறந்தவுடன் மனைவியை நெருப்பில் போட்டு எரிக்கும் ‘சதி’ எனும் உடன் கட்டை ஏறும் கொடுமை, சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. 1988ஆம் ஆண்டு இராஜஸ்தான் மாநிலத்தில் ரூத்கன்வர் என்ற பெண் உடன்கட்டை ஏறினார். உடனே பார்ப்பனர்கள் அந்தப்பெண்ணுக்கு கோயில் கட்டி ‘சதி மாதா’ என்று வழிபட ஆரம்பித்தார்கள். சங்பரிவார்களும் இதை ஆதரித்தன. பா.ஜ.க.வின் உ.பி. முதல்வராக இருந்த கல்யாண்சிங், சதி மாதா கோயிலுக்குச் சென்று வழிபட்டார். பூரி சங்கராச்சாரியான பார்ப்பனர் நிரஞ்சோ தீர்த் என்பவர், அப்போது உடன்கட்டை ஏறுவதை நியாயப்படுத்தி பேசி வந்தார். இராஜஸ்தான் மாநில அரசு நிறைவேற்றிய உடன்கட்டை ஏறுதல் தடுப்புச்சட்டத்தைக் கடுமையாகக் கண்டித்து வந்தார். இந்த சட்டத்தின்படி உடன் கட்டையை ஆதரித்துப் பேசுவதும் குற்றம். சங்கராச்சாரி அது பற்றிக் கவலைப்படவில்லை. இந்த நிலையில் சங்கராச்சாரி மீரத் நகரில் உடன்கட்டை ஏறுவதை ஆதரித்துப் பேசவும் யாகம் நடத்தவும் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். இதை எதிர்த்து வடநாட்டில் சமூக நீதியை தீவிரமாக ஆதரிப்பவரும் பார்ப்பன எதிர்ப்பாளராகவும் வலம்...

‘சாய்கிருஷ்ணன்’ முகமூடியைக் கிழித்த அறிவியல் குழு

பெங்களூரிலிருந்து 80 மைல் தொலைவிலுள்ள பாண்டவபுரம் எனும் ஊரில் சாய் கிருஷ்ணன் எனும் ஏழு வயது சிறுவன் அற்புத சக்தியோடு கையசைப்பில் விபூதியை தருவதாக  பெரும் கூட்டம் கூடத் தொடங்கியது. புட்டபர்த்தி சாய்பாபாவின் மறு அவதாரம் என்று இந்த சிறுவனைக் கூறினார்கள். இந்த சிறுவனைப் பார்த்து புட்டபர்த்தி சாய்பாபா சீடர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. ஒரு ஆஸ்திரேலிய  நாட்டுக்காரர், இந்த சிறுவனின் ‘அதிசய சக்தியை’  விளக்கி வெளிநாடுகளில் பரப்ப ஒரு  திரைப்படத்தையே தயாரித்தார். “இந்த சிறுவன் 11 மாதம் வயிற்றிலிருந்து பிறந்தான் என்றும், பிறக்கும்போது தனக்கு பிரசவ வலியே இல்லை என்றும், பிறந்ததிலிருந்தே அவனது உடலிலிருந்து விபூதி கொட்டத் தொடங்கி விட்டது என்றும் அவரது தாயார் கூறி வந்தார். பெங்களூர் பல்கலைக்கழகத்தின் துணை  வேந்தராக இருந்தவர் டாக்டர் எச். நரசிம்மையா – எளிமையான காந்தியவாதி; சீரிய பகுத்தறிவாளர்; மூடநம்பிக்கைகளுக்கு எதிராக இயக்கங்களை நடத்திய பெருமைக்குரியவர். பல்கலைக் கழகப் பேராசிரியர்களைக் கொண்டு மூடநம்பிக்கை ஒழிப்புக் குழு ஒன்றை...

மிரண்டு ஓடிய ‘பேய்’ ஓட்டும் பாதிரியார்கள்

சாமியார்கள் சங்கராச்சாரிகள்  அற்புதசக்தி இருப்பதாக மோசடி செய்தவர்களை நேருக்கு நேர் சந்தித்து  அவர்களின் முகத்திரையைக் கிழித்து  எறிந்த சம்பவங்கள் ஏராளம் உண்டு. அது குறித்து சில நிகழ்வுகளின்  தொகுப்பு: மேட்டூர் கொளத்தூரிலிருந்து மூன்று  மைல் தொலைவிலுள்ள கிராமம் தார்க்காடு சுந்தராபுரம். 1975 ஆம் ஆண்டு  செப்டம்பர் 25ஆம் தேதி இந்த ஊரில் கிறிஸ்தவர் பிரச்சார முகாம் நடந்தது. மதப்பிரச்சாரம் மட்டுமின்றி, ‘பேயோட்டுதல்’ போன்ற மூடநம்பிக்கைகளையும் மக்களிடையே பரப்பி வந்தார்கள். செய்தியறிந்து அவ்வூர் பொது மக்கள் கொளத்தூர் திராவிடர் கழகத் தோழர்களுக்கு  தகவல் தெரிவித்தனர். கொளத்தூர் திராவிடர் கழகத் தலைவர் தா.செ. மணி  (கழகத் தலைவர் கொளத்தூர் மணி), பகுத்தறிவாளர் கழகத் தலைவர் டி.ஆர்.கிருஷ்ணன் மற்றும் பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் சுபாஷ் சந்திர போஸ், ஆசிரியர்  எம். இராமலிங்கம், டி.கே. நாச்சிமுத்து, வி.கே. முத்துசாமி ஆகியோரடங்கிய குழு தார்க்காடு விரைந்தது. 8 மணிக்கு மதப் பிரச்சாரகர் நிகழ்ச்சியைத் தொடங்கியுடன்,கிறிஸ்தவ மதம் குறித்து தங்களின் சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டும் என்று...