மருத்துவக் கல்வியில் சமூக அநீதிகள் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்,
நாடு முழுவதும் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கு நீட் நுழைவுத்தேர்வு மூலம் தான் மாணவர் சேர்க்கையை நடத்திட வேண்டும் என்ற நிலையை, மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதற்காக இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் பல் மருத்துவக் கவுன்சில் சட்டங்களில் திருத்தங்களை, பாராளுமன்றம் மூலம் 2016 – ஜூலையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலும் அளித்துவிட்டார். எனவே, வரும் 07.05.2017ஆம் தேதி நீட் தீர்வு இந்தியா முழுவதும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்விற்காக விண்ணப் பித்துள்ளனர். நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதின் மூலம் மட்டுமே, மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள். தனியார் மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள். தனியார் மருத்துவப் பல்கலைக் கழகங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள். அகில இந்திய தொகுப்பு இடங்கள் (All India Quota) . ராணுவ மருத்துவக் கல்லூரி இடங்கள். வெளிநாடு...