Tagged: நீதிபதி சந்துரு

அர்ச்சகர் உரிமை: உச்சநீதிமன்றத் தீர்ப்புக் குறித்து – நீதிபதி சந்துரு கருத்து

அர்ச்சகர் உரிமை: உச்சநீதிமன்றத் தீர்ப்புக் குறித்து – நீதிபதி சந்துரு கருத்து

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு சமூக நீதி வரலாற்றை மீண்டும் பின்னோக்கி இழுத்துச் சென்றுவிட்டது என்று முன்னாள் நீதிபதி சந்துரு கருத்து தெரிவித்துள்ளார். இந்து தமிழ் நாளேட்டில் (3.1.06) இது குறித்து அவர் எழுதியுள்ள கட்டுரையின் ஒரு பகுதி. 1970-ல் இந்தச் சட்டப்பிரிவு திருத்தப்பட்டு, வாரிசுரிமை அடிப்படையிலான நியமனம் இரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் (சேஷம்மாள் வழக்கு) அர்ச்சகர் நியமனம் தொடர்பான அதிகாரம் மதசார்புத் தன்மையற்றது என்றும், அதற்கான தகுதி, திறமைகளை அரசு நிர்ணயிக்கலாம் என்றும் குற்றமிழைத்த அர்ச்சகர்களைப் பதவி நீக்கம் செய்வதற்கும் அறநிலைத் துறை நிர்வாகத்திற்கு அதிகாரம் உண்டு என்றும் அறிவித்தது. ஆனால் எந்த சைவ மற்றும் வைணவக் கோயில் களில் ஆகம முறைப்படி அர்ச்சகர்கள் நியமிக்கப் படுகிறார்களோ அங்கெல்லாம் ஆகம முறையைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறியது. அதே சமயத்தில் அப்பதவிகளில் எவரும் வம்சாவளி உரிமை கொண்டாட முடியாது என்றும்...