Tagged: தோழர் கௌசல்யா

பெரியாரின் விடுதலைப் பெண் தோழர் கௌசல்யா கடிதம்

அனைவருக்கும் அன்பு வணக்கம். நாம் ஒவ்வொருவரும் இரு கண்களைக் கொண்டுள்ளோம். கண்கள் என்பது நம் எதிரிலே இருக்கும் பொருட்களை மனிதர்களை நிகழ்வுகளை பார்ப்பதற்கு கருவியாகப் பயன்படுகிறது. ஆனால் பேருந்து நிலையத்தில் நமை நோக்கி நெருங்கி வந்து ஒரு இளைஞர் இந்த பஸ் எங்க போகுதுனு கொஞ்சம் பாத்து சொல்லுங்க எனக் கேட்டால் நாம் உடனே சொல்வோம் அல்லது மனதுக்குள்ளாவது நினைத்துக் கொள்வோம் ஏன் இவனுக்குக் கண்ணில்லையா என்று. அவனுக்குக் கண்கள் இருக்கிறது. ஆனால் கல்விக்கண் இல்லையானால் கண்ணிருந்தும் அவனைக் குருடனாகத்தான் இந்த சமூகம் பார்க்கும். கல்விக்கண் இல்லையானால் அவர் கண்ணுடையவராக இருந்தாலும் வெறும் புண்ணுடையவர் என்று வள்ளுவர் சொல்கிறார். இதேபோல் நான் என் பெற்றோர் மூலம் இந்த மண்ணுக்கு வந்தேன். என் மனம் எந்த இலக்கும் இல்லாமல் நோக்கமும் இல்லாமல் இயங்கிக் கொண்டிருந்தது. அடுத்த மனிதன் வலி அறியாது எனக்கான வாழ்வை மட்டுமே ஒரு காலம் வரை வாழ்ந்தேன். மனிதன் என்பவன்...