Tagged: தோழர் கவுசல்யா

பெரியார் பெண் விடுதலையின் தந்தை மட்டுமல்ல; தமிழ்மண் விடுதலையின் தந்தை

பெரியார் பெண் விடுதலையின் தந்தை மட்டுமல்ல; தமிழ்மண் விடுதலையின் தந்தை

அக்டோபர் 7ஆம் தேதி பெரம்பூர் பெரவள்ளூர் சதுக்கத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் உடுமலை கவுசல்யாவின் எழுச்சி உரை இந்த மேடை நமக்கெல்லாம்  கற்றுத்தரும் அரசியல் பாடம் ஈடிணையற்றது என்று நான் இந்த அழைப்பிதழ் பார்த்ததிலிருந்தே உணர்கிறேன். நான் அறிந்து மேடையில் உள்ள ஒவ்வொரு வரும் சமூகத்தில் ஒவ்வொரு அடையாளங்களைப் பெற்றிருக்கிறார்கள். அது ஒடுக்கப்பட்டோரின் குரலாகவே தம் குரலை ஆக்கிக் கொண்டவர்கள், சாதி ஒழிப்பில் எவ்வகையிலும் சமரசமற்றவர்கள், மீத்தேன் ஹைட்ரோ கார்பன் அழிவுத் திட்டங்களுக்கு எதிராகக் களத்தில் அஞ்சாது நிற்கும் போராளிகள், அடிப்படையில் இடதுசாரிச் சிந்தனையில் ஊன்றி நிற்பவர்கள் என எல்லாப் பெண்களும் பெண் விடுதலையின் அடையாளமாகவே தமது வாழ்வை அமைத்துக் கொண்டவர்கள். இன்னொரு வகையில் சமூகத்தின் விலங்குகளையும் பண்பாட்டுச் சிறைகளையும் உடைத்து விடுதலைப் பெண்ணாகவே வாழாமல் இப்படிப்பட்ட அடையாளங்களோடு பெண்கள் நிலைபெற்று வெற்றி பெற முடியாது. விடுதலை வாழ்வை பெண்கள் விட்டுக் கொடுக்காமல் வாழ்வதன் மூலம்தான், மக்களுக்கான போராட்ட வாழ்வை மேற்கொள்ள...