மூடநம்பிக்கை பரப்பும் தொலைக்காட்சிகள் மீது புகார்கள் குவிகின்றன!
தொலைக் காட்சிகளில் பேய், பில்லி, சூன்யம், திகில், குரங்குக் கதைகள் போன்ற மூடநம்பிக்கைகளைப் பரப்பும் நிகழ்ச்சிகள் அதிகரித்து வருகின்றன. சிறிதும் சமூகப் பொறுப்பின்றி அரசியல் சட்டம் வலியுறுத்தும் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்ற கொள்கைகளுக்கு எதிராக நிகழ்ச்சிகளை ஒளி பரப்பி வருகின்றன இந்த தொலைக்காட்சிகள் பற்றி மத்திய அரசிடம் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை 1850 புகார்கள் பார்வையாளர்களிடமிருந்து குவிந்துள்ளன. இதில் 1250 புகார்கள் இந்த மூடநம்பிக்கை நிகழ்ச்சிகள் தொடர்பானவை. மற்றவை ஆபாசம், வன்முறை தொடர்புடைய நிகழ்ச்சிகள் பற்றிய புகார்கள். இது வரை ஆபாசம், வன்முறை பற்றிய புகார்கள் மட்டுமே அதிகம் குவிந்த நிலை மாறி, இப்போது மூடநம்பிக்கை நிகழ்ச்சிகளுக்கு எதிரான புகார்கள் முதல்முறையாக அதிகரித்துள்ளன. தொலைக்காட்சிகள் குறித்த புகார்களை விசாரிப்பதற்காக ‘ஒளி பரப்புகள் உள்ளடக்கத்துக்கான புகார் கவுன்சில்’ (பிசிசிசி) என்ற அமைப்பு உள்ளது. மத்திய தகவல் ஒளி பரப்பு அமைச்சகம் இந்த புகார்களை மேற்குறிப்பிட்ட அமைப்புக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த ‘பிசிசிசி’...