‘தளி’ தொகுதியில் தி.முக. வேட்பாளரை ஆதரித்து கழகம் கிராமம் கிராமமாக பரப்புரை
கிருஷ்ணகிரி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக அமைப்பாளர் பழனி, 2012ஆம் ஆண்டில் துப்பாக்கியால் சுட்டும், கழுத்தை வெட்டியும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். தளி பகுதியில் கடும் குற்றப் பின்னணிகளோடு சட்ட விரோதமாக நில ஆக்கிரமிப்பு, குவாரி கொள்ளைகளை நடத்தி வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த இராமச்சந்திரன் என்பவரை எதிர்த்து, மக்கள் உரிமைக்காகப் போராடியதற்காக பழனி படுகொலைக்கு உள்ளானார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் தளி இராமச்சந்திரன். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு 8 மாதங்களுக்குப் பிறகு விடுதலையாகி விட்டார். கொலை வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ‘தளி’ தொகுதி வேட்பாளராக இராமச்சந்திரனை அக்கட்சி நிறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை இந்தத் தேர்தலில் ஆதரிக்கும் திராவிடர் விடுதலைக் கழகம் ‘தளி’ தொகுதியில் மட்டும் அக்கட்சி தனது வேட்பாளரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தது. இந்திய...