Tagged: தேர்தல் ஆணையம்
பெரியார் சிலைகளை, சிலைகளுக்கு கீழே உள்ள வாசகங்களை மறைக்க கூடாது என கழகம் தொடர்ந்த வழக்கில் வெற்றி!
பெரியார் சிலைகளை, சிலைகளுக்கு கீழே உள்ள வாசகங்களை மறைக்க கூடாது என கழகம் தொடர்ந்த வழக்கில் வெற்றி! தமிழ்நாடு முழுவதும் இருக்க கூடிய தந்தை பெரியார் சிலைகளை மட்டுமல்ல, சிலைகளுக்கு கீழே உள்ள வாசகங்களை (கடவுள் மறுப்பு உள்ளிட்ட) மறைக்க கூடாது என நீதி மன்றம் இன்று அதிரடி உத்தரவு ! திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மாநில அமைப்புச் செயலாளர் தோழர் ஈரோடு இரத்தினசாமி அவர்கள் தொடர்ந்த வழக்கில் இன்று (11.03.2016) சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேசு மற்றும் விமலா ஆகியோர் கொண்ட அமர்வு இந்த உத்தரவை வழங்கியது. மேலும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கழகத்தின் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் திராவிடர் விடுதலைக் கழக கொடிக் கம்பங்களை அகற்றக்கூடாது என கொடுக்கப்பட்ட மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கில் கழகத்தின் சார்பாக வழக்கறிஞர்கள் தோழர் கான்சியஸ் இளங்கோ,தோழர் துரை அருண்...