Tagged: தேங்காய்

மூத்த குடிமக்களே கேட்கிறார்கள்!

மூத்த குடிமக்களே கேட்கிறார்கள்!

“கூழுக்கு குழந்தைகள் அழும்போது குழவிக் கல்லுக்கு பாலாபிஷேகமா?” என்ற கேள்வியை பெரியார் இயக்கம், மக்கள் முன் வைத்தது. முடிவெய்திய சுயமரியாதை சுடரொளி சுவரெழுத்து சுப்பையா இதை சுவரெழுத்துகளில் தார் கொண்டு எழுதினார். பக்தியின் பெயரால் பொருள், பணம், நேரம் வீணாக்கப்படும் அவலம் உலகில் இந்த நாட்டைப் போல் வேறு எங்கும் பார்க்க முடியாது. கடந்த ஏப்.8ஆம் தேதி ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டில் வந்த ஒரு செய்தி வியப்பிலாழ்த்தியது. சென்னையில் பெசன்ட் நகரில் ‘அஷ்டலட்சுமி’ கோயில் இருக்கிறது. கூட்டம் அதிகம் வரும் கோயில். பக்தர்கள் தேங்காய் உடைப்பார்கள்; தேங்காய்க்குள் உள்ள ‘இளநீர்’ வீணாக தரையில் ஓடும். பெசன்ட் நகர் குடியிருப்புகளில் வாழும் 50 மூத்த குடிமக்கள் ஒன்று சேர்ந்து இப்படி சிறந்த உணவான இளநீர் வீணாகிறதே என்று கவலைப் பட்டார்கள். மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ததோடு, தமிழக முதல்வருக்கும் கடிதம் எழுதப் போவதாகக் கூறுகிறார்கள். முதலமைச்சரே மூடத்தனத்தில் உறைந்து கிடக்கும்போது அவருக்கு கடிதம்...