Tagged: தீர்மானங்கள்

வேத மரபு மறுப்பு மாநாடு சேலம் 24122016 தீர்மானங்கள்

24-12-2016 அன்று சேலத்தில் ,சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக நடத்தப்பட்ட சித்தர்கள், வள்ளலார், பெரியார் அடிச்சுவட்டில் ‘வேத மரபு மறுப்பு மாநாட்டில்’  நிறைவேற்றப்பட்ட தீர்மானம். வேதங்கள் – பகவத்கீதை – மனுஸ்மிருதி அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட வேத மரபு – பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தமிழரின் திருக்குறள் மரபுக்கு எதிரானதாகும். வேதங்கள் உருவான காலத்திலிருந்து அதற்கு எதிர்ப்புகளும் தோன்றிவிட்டன. பார்ப்பனீயம் இந்த எதிர்ப்புகளை சாதுரியமாக வீழ்த்தியிருப்பதை வரலாறுகள் உணர்த்துகின்றன. சார்வாகர் – சமணர் –  புத்தர் – சித்தர்கள் – வடலூர் வள்ளலார் போன்று பலரும் போர்க் கொடி உயர்த்தி இருக்கிறார்கள். இறுதியாக வேதமதமாகிய பார்ப்பன மதம் பிரிட்டிஷ் ஆட்சியைப் பயன்படுத்தி ‘இந்து’ என்ற வலைக்குள் வெகு மக்களை நிர்பந்தமாக  உள்ளிழுத்துக் கொண்டது. இதன் வழியாக சமூக அதிகாரங்களை தனது வசமாக்கிக் கொண்டு அதனூடாக தன்னை அரசியல் அதிகார சக்தியாகவும் மாற்றிக் கொண்டது. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி –...

செயலவை நிகழ்வுகள்

செயலவை நிகழ்வுகள்

திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டம் 21.6.2014 சனிக் கிழமை 11 மணியளவில் கோவை அண்ணாமலை ஓட்டல் அரங்கில் கூடியது. செயலவைத் தலைவர் துரைசாமி தலைமையேற்றார். கோவை கழகத் தோழியர் ராஜாமணி, கடவுள்-ஆத்மா மறுப்புகளைக் கூற, மாநகர மாவட்டச் செயலாளர் தோழர் நேருதா° வரவேற்புரையாற்றிட பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தொடக்க உரை யாற்றினார். மாறி வரும் அரசியல் சூழலில் பெரியாரியலை முன்னெடுப்பதில் பின்பற்ற வேண்டிய அணுகுமுறைகளை விளக்கி, ஒரு மணி நேரம் பேசினார். கழகத்தின் நிதிநிலை மற்றும் மக்கள் சந்திப்பு இயக்கம் குறித்து பொருளாளர் ஈரோடு இரத்தினசாமி விரிவாக விளக்கினார். உரையாற்றிய தோழர்கள்: மண்டல செய லாளர்கள் சேலம்-சக்தி வேலு, மதுரை-இராவணன், நெல்லை-குமார், தஞ்சை-இளையராசா, கோவை-விஜியன், ஈரோடு-இராம இளங்கோவன் ஆகியோர் உரையைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி தீர்மானங்களை முன்மொழிந்து உரை யாற்றினார். 2 மணி வரை கூட்டம் நீடித்தது. மதிய உணவுக்குப் பிறகு மீண்டும் 3 மணிக்கு...