செயலவை நிகழ்வுகள்

திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டம் 21.6.2014 சனிக் கிழமை 11 மணியளவில் கோவை அண்ணாமலை ஓட்டல் அரங்கில் கூடியது. செயலவைத் தலைவர் துரைசாமி தலைமையேற்றார். கோவை கழகத் தோழியர் ராஜாமணி, கடவுள்-ஆத்மா மறுப்புகளைக் கூற, மாநகர மாவட்டச் செயலாளர் தோழர் நேருதா° வரவேற்புரையாற்றிட பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தொடக்க உரை யாற்றினார். மாறி வரும் அரசியல் சூழலில் பெரியாரியலை முன்னெடுப்பதில் பின்பற்ற வேண்டிய அணுகுமுறைகளை விளக்கி, ஒரு மணி நேரம் பேசினார். கழகத்தின் நிதிநிலை மற்றும் மக்கள் சந்திப்பு இயக்கம் குறித்து பொருளாளர் ஈரோடு இரத்தினசாமி விரிவாக விளக்கினார்.

உரையாற்றிய தோழர்கள்: மண்டல செய லாளர்கள் சேலம்-சக்தி வேலு, மதுரை-இராவணன், நெல்லை-குமார், தஞ்சை-இளையராசா, கோவை-விஜியன், ஈரோடு-இராம இளங்கோவன் ஆகியோர் உரையைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி தீர்மானங்களை முன்மொழிந்து உரை யாற்றினார்.

2 மணி வரை கூட்டம் நீடித்தது. மதிய உணவுக்குப் பிறகு மீண்டும் 3 மணிக்கு கூட்டம் தொடங்கியது. கீழ்க்கண்ட மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் உரையாற்றினர்:

சென்னை-ஜான், காஞ்சிபுரம்-தினேஷ், விழுப்புரம் -நாவாபிள்ளை, வேலூர்-திலீபன், தருமபுரி-பரமசிவம், நாகை-மகேஷ், திருவாரூர்-காளிதா°, தஞ்சாவூர்-பாரி, மதுரை-பாண்டியன், திண்டுக்கல்-நல்லதம்பி, திருப்பூர் மாநகர்-குமார், ஈரோடு வடக்கு-நாத்திக ஜோதி, ஈரோடு தெற்கு-(ஆசிரியர் சிவக்குமார்) சென்னிமலை செல்லப்பன், சேலம் கிழக்கு-டேவிட், சேலம் மேற்கு-சூரியக் குமார், கோவை மாநகர்-கிருட்டிணன், கோவை புறநகர்-மேட்டுப்பாளையம் இராமச் சந்திரன், பொள்ளாச்சி-விஜய ராகவன், திருச்சி-ஆரோக்கியசாமி, கரூர்-பாபு, காஞ்சிபுரம்-வெங்க டேசன், பொள்ளாச்சி-நிர்மல் குமார். விழுப்புரம்-இரத்தினவேலு.

தொடர்ந்து மாணவர் கழகம் சார்பில் பா.சிவக்குமார், சிலம்பரசன், சுயமரியாதைக் கலைப் பண்பாட்டுக் கழகம் சார்பில் கொளத்தூர் குமார், அ.பா. சிவா, அறிவியல் மன்றம் சார்பில் ஆசிரியர் சிவகாமி, ஆசிரியர் சிவக் குமார், வீதி நாடகக் குழு சார்பில் அர்ஜூனன் ஆகியோர் உரையைத் தொடர்ந்து, கழகப் பொருளாளர் ஈரோடு ரத்தினசாமி, பொதுச் செய லாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் உரையாற்றினர். இரவு 7.30 மணி வரை கூட்டம் நீடித்தது. வீர பாண்டி பாபு நன்றி கூறினார்.

கோவை மாநகர மாவட்டக் கழகம் சிறப்பான ஏற்பாடுகளை செய் திருந்தது.

 

கோவையில் கூடிய கழக செயலவைக் கூட்ட முடிவுகள்

ஜூலை 10இல் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் முற்றுகை

  1. கடந்த ஆட்சிக்காலங்களில் மறைமுகமாக நடந்துவந்த இந்தித் திணிப்பு – மோடி அமைச்சரவை பதவியேற்புக்குப்பின் – பிரதமருக்கான தொடர்பு மொழியாகவும், சமூக வலைத்தளங்களில் அரசுப் பயன்பாட்டு மொழியாகவும், புதிய வேகமெடுத்து நுழையச் செய்வதை திராவிடர் விடுதலைக்கழகம் வன்மையாகக் கண்டிப்பதோடு – இந்தியா என்ற அமைப்பு நீடிக்கும்வரை ஆங்கிலம் மட்டுமே அலுவல் மொழியாக நீடிக்கவேண்டும் என்று வற்புறுத்துகிறது.
  2. மக்கள் எதிர்ப்புகளைப் புறந்தள்ளிவிட்டு – கூடங் குளத்தில் 1, மற்றும் 2 ஆவது அணு உலைகளைத் திணித்த மத்திய அரசு, பெருந் தொகை செலவிட்ட பிறகு திட்டத்தை முடக்க லாமா? என்று நியாயங் கற்பித்தது. இப்போது நிதியேதும் ஒதுக்கி செலவிடப்படாத நிலையில், 3 வது மற்றும் 4 வது அணுஉலைகளை நிறுவ – மோடி அமைச்சரவை மேற்கொள்ளும் முயற்சிகளை – தமிழக முதல்வர் உறுதியாகத் தடுத்து நிறுத்த முன்வர வேண்டும். என இச்செயலவை வலியுறுத்துகிறது. பெரும்தொகை முதலீடு செய்யப்பட்டதைக் காரணம் காட்டி 1 ஆவது மற்றும் 2 ஆவது அணுஉலைத் திட்டத்தை ஆதரித்து வந்த அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் இந்த நிலையிலாவது தங்கள் முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று – இச்செயலவை வலியுறுத்து கிறது.
  3. காவிரி நடுவர் மன்றம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவேண்டும் என்பதை திட்டவட்டமாக வலியுறுத்தி வழங்கியிருந்த தீர்ப்பாணை – தமிழக முதல்வரின் இடைவிடாத முயற்சியால் மத்திய அரசின் அரசிதழில் வெளியிட்டு, சட்டப்பூர்வ ஏற்பு வழங்கப்பட்ட நிலையில், மோடி அரசு – இப் பிரச்சினையை கடந்தகால காங்கிர° ஆட்சியைப் போல – கட்சி அரசியல் காரணங்களுக்காக மீண்டும் குழப்பிட முயல்வதை இச்செயலவை வன்மையாகக் கண்டிக்கிறது.
  4. ஏற்கனவே, காவிரி நீரின்றி, வறண்ட பிரதேச மாகிவரும் காவிரிப் படுகையில், மற்றொரு பேரிடியாக – நிலத்தடி நீரை உறிஞ்சிடும் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இத்தகைய ஆபத்திலிருந்து காப்பாற்ற – காவிரிப்பாசனப் படுகைப் பகுதியை பசுமை மண்டலமாக அறிவித்து – அந்தப் பகுதிகளில் வேளாண்மைக்கு ஊறுவிளைவிக்கும் எந்தத் திட்டத்தையும் அனுமதிக்கக்கூடாது என்று தமிழக அரசை இச்செயலவை வற்புறுத்து கிறது.
  5. பெரும்பொருட் செலவில் நடத்தப்படும் ஆடம்பரத் திருமணங்கள் – போலி சமூகப் பெருமைக்காக, வீண் விரயங்களையும், குடும்பங் களின் பொருளாதார நெருக்கடிகளையும் உருவாக்கி வருகிறது. புரோகித மறுப்பு, சிக்கனத் திருமணங்களை நடத்துவதில் முன்னேடியாக விளங்கிய தமிழகத்தில் – கர்நாடக, கேரள மாநிலங்களில் அமுலில் உள்ளதைப் போன்ற ஆடம்பரத் திருமணங்களுக்கான வரிவிதிப்பு முறையைக் கொண்டுவர வேண்டும் எனவும், அதேபோல பகுத்தறிவுக் கருத்துக்களைப் பரப்புவதில் முன்னோடியாக விளங்கும் தமிழகத்தில், மகாராஷ்டிர அரசு கொண்டு வந்துள்ளதைப்போன்ற மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டுவரை வேண்டும் எனவும் தமிழக அரசை இச்செயலவை வலியுறுத்துகிறது.
  6. மக்கள் சந்திப்பு இயக்கத்தில் தொடர்ந்து பங்கேற்றுவரும் தோழர்களுக்கும், இத் திட்டத்தை ஒருங்கிணைத்து முன்னெடுத்து வரும் கழகப் பொருளாளர் தோழர் இரத்தினசாமி அவர்களுக்கும் இச்செயலவை மனம் நிறைந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. மக்கள் பேராதரவு பெற்றுவரும் இந்த இயக்கத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 5 நாட்கள் முதல் 10 நாட்கள் வரை தொடர்ந்து நடத்துவது என்றும் இந்த செயலவை முடிவு செய்கிறது.
  7. ஒவ்வொரு மாதமும், மாவட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் – மக்கள் மேம்பாட்டு மனித நேய சிந்தனைகளோடு – பெண்ணுரிமை, அறிவியல் சிந்தனை வளர்த்தெடுத்தல் சமூகநீதி, மக்கள் மேம்பாட்டுக்கான ஆலோசனை போன்றவற்றை பெரியாரியல் பார்வையில் துண்டறிக்கைகளை வெளியிட்டும் மக்களை நேரில் சந்தித்து தேவையான உதவிகளைச்செய்து கடமையாற்றுவது என்றும் இச்செயலவை முடிவு செய்கிறது. இதற்கு அந்தந்த மாவட்டத் தலைவர்கள் பொறுப்பேற்று மாதந்தோறும் அறிக்கையினை கழகத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று இச்செயலவை கேட்டு கொள்கிறது.
  8. தொடர்வண்டித் துறை, சுங்கத் துறை, வருமான வரித் துறை போன்ற தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழகத்தைச் சார்ந்தவர்கள் 10 விழுக்காட்டிற்கும் குறைவாகவே பணி நியமனம் பெற்று வருகிறார்கள் என்பது அதிர்ச்சியைத் தருகிறது. வடமாநிலத்தவர்களின் துறையாகவே இந்தத் துறைகள் மாறி வருவதற்குக் காரணம் – மண்டல வாரியாக நடத்தப்பட்டுவந்த பணியாளர் தேர்வுமுறையை, அகில இந்திய அளவிலான பணியாளர் தேர்வாக மாற்றி 2006 ஆண்டில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பாகும். மண்ணின் மைந்தர்களைப் புறம்தள்ளும் இந்தத் தேர்வு முறையில் மத்திய அரசின் நிர்வாக அமைப்பு களும் நெருக்கடிக்கு உள்ளாகி வருகிறது. இந்த அநீதியை மாற்றி அமைக்கும் சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்றும் மாநில அடிப்படையிலேயே பணியாளர் தேர்வு மய்யங்கள் அமைக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தி, வரும் 10.7.2014 அன்று சென்னை மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தை முற்றுகையிடும் போராட்டத்தை ஒத்த கருத்துள்ள அமைப்புகள் – இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக நடத்துவது என்றும் இச்செயலவை தீர்மானிக்கிறது.
  9. மதவெறி, ஜாதிவெறியின் ஆபத்துக்கள், உலக மயமாக்கல் கொள்கையினால் உருவாகியுள்ள சமூக பாதிப்புக்களை கவனத்தில் கொண்டு-திராவிடர் விடுதலைக்கழகப் பொறுப்பாளர் களும் தோழர்களும், கொள்கைக்கும் இயக்கத் திற்குமான தங்கள் பங்களிப்பை, இருத்தலுக்கான அடையாளமாக்கிக் கொள்ளாமல், கூடுதல் பங்களிப்பு வழங்கிட வேண்டியதன் அவசியத்தை யும் தேவையையும் இந்தசெயலவை கவலையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறது. இவ்வகை அணுகு முறையால் மட்டுமே திராவிடர் விடுதலைக் கழகத்தின் பெரியாரியல் செயல்பாடுகளை வீரியமாக முன்னெடுக்க முடியுமென்று இச் செயலவை உறுதியாக நம்புகிறது.
  10. பரமக்குடி, பரளிப்புதூர், தருமபுரி, கரியாம்பட்டி(நிலக்கோட்டை), வடக்குமாங்குடி முதலிய பகுதிகளில் தலித் மக்கள் மீதான கொடுந்தாக்குதல், தீவைப்பு, சொத்துக்களைச் சேதப்படுத்துதல் ஆகியவை தொடர்ந்து நடந்து வருகின்றன. இத்தகைய வழக்குகளில் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை என்றே நாம் கருதுகிறோம். இந்த நிலையில், காவல் நிலையங்களில் அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் ஆதிக்க ஜாதிப் பிரிவைச் சார்ந்தவர்களையே காவல்துறை அதிகாரிகளாக நியமிப்பதைத் தவிர்க்கவேண்டும் என்றும், அதேவேளை தலித் பிரிவைச் சேர்ந்தவர்கள் அந்தந்தப் பகுதி காவல் நிலையங்களில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஏற்கனவே திராவிடர் விடுதலைக்கழகம் நிறைவேற்றியிருந்த தீர்மானத்தை உடனடியாக தமிழக அரசு செயல்படுத்தவேண்டும் என்று இந்தச் செயலவை மீண்டும் வலிறுத்துகிறது.
  11. ஒரே ஜாதிக்குள் நடைபெறும் திருமணங்களால் ஆரோக்கியமற்ற தலைமுறை உருவாகிவரும் ஆபத்துக்களை அறிவியல் ரீதியாக விளக்கிடும் “அகமண முறை எதிர்ப்புப் பரப்புரைப் பயணத்தை” வரும் ஜூலை 15 அன்று திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தொடங்கி திண்டுக்கல், திருப்பூர், பொள்ளாச்சி மாவட்டங்களில் பயணித்து ஆக°ட் 18 இல் பல்லடத்தில் நிறைவு செய்வது என்று தீர்மானிக்கிறது.

 

பெரியார் முழக்கம் 29062014 இதழ்

You may also like...