Tagged: திவிக தொடக்க விழா

ஈரோடு அழைக்கிறது! கழகத் தோழர்கள் கவனத்துக்கு…

ஈரோடு அழைக்கிறது! கழகத் தோழர்கள் கவனத்துக்கு…

12.8.2012 அன்று ஈரோட்டில் கழகத் தோழர்களின் கலந்துரையாடல் சந்திப்பு நடக்கும் இடம்: செல்லாயி அம்மாள் திருமண மண்டபம், (ஈரோடு பேருந்து நிலையம் அருகில்) நேரம் : காலை 10 மணி   பாழ்பட்டு, சீர்க்கெட்டு ஆமைகளாய் ஊமைகளாய்க் கிடந்த தமிழினத்துக்கு ‘மானமும் அறிவும்’ பெற்றுத் தர சூளுரை மேற்கொண்டு, தன்மானத்தை இனமானத்துக்காக ஈகை செய்த அறிவு ஆசான் நமது தலைவர் பெரியார் பிறந்த ஈரோட்டில், நாம் சந்திக்கிறோம். சுயமரியாதை இயக்க வரலாற்றில் ஈரோட்டுக்கு தனிச் சிறப்புகள் உண்டு. 1917 ஆம் ஆண்டில் தனது 38 ஆம் அகவையில் பெரியார் நகர் மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது ஈரோட்டில்தான்! 1921 இல் காந்தியார் கட்டளையை ஏற்று 144 தடை உத்தரவை மீறி பெரியார் கள்ளுக்கடை மறியலை தலைமையேற்று நடத்தியதும் இதே ஈரோடுதான்! பெரியாரின் துணைவியார் நாகம்மையார், தங்கை கண்ணம்மாளும் மறியலில் கைதானார்கள். மறியல் தீவிரமாகி, 10000 பேர் கைது செய்யப்பட வேண்டிய நிலையில் பதறிப்...