Tagged: திவிக தேர்தல் நிலைப்பாடு

இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சிக்கு ஆதரவு; இதர தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு கழகத்தின் தலைமைக் குழு முடிவுகள்

இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சிக்கு ஆதரவு; இதர தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு கழகத்தின் தலைமைக் குழு முடிவுகள்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனித நேய மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களையும், இதர தொகுதிகளில் தி.மு.க. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்களையும் ஆதரிக்க திராவிடர் விடுதலைக் கழகம் முடிவு செய்துள்ளது. 19.4.2016 அன்று திருப்பூரில் கழகப் பொருளாளர் துரைசாமி தோட்டத்தில் கழக தலைமைக் குழு, கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் கூடியது. தலைமைக் குழுவின் விரிவான பரிசீலனைக்குப் பிறகு கீழ்க்கண்ட தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு தேர்தல் களத்தில் இதுவரை கண்டிராத அளவில் குழப்பங்களும் முரண்பாடுகளும் மேலோங்கியிருக்கின்றன. ஆட்சி அதிகாரத்திற்காக பல்வேறு கட்சிகள் தனித் தனியாக களத்துக்கு வந்துள்ளன. கொள்கைப் பார்வையோடு எந்த ஒரு அணியையும் முழுமையாக அடையாளம் காண முடியாத அரசியல் சூழலில் திராவிடர் விடுதலைக் கழகம் இரு கண்ணோட்டங்களில் இந்தத் தேர்தலை அணுகிட முடிவு...