தலையங்கம் பெரியார் கூறுகிறார் நமது முக்கிய கொள்கை
“சாதி ஒழிய வேண்டும் என்பதும் – நாடு பிரிய வேண்டும் என்பதும்தான் நம் கழகத்தின் முக்கிய கொள்கை. மூடநம்பிக்கை ஒழிய வேண்டும் என்பதும் – வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதும், மற்றவைகளும், இதன் உட்பிரிவுதான்.” – ‘விடுதலை’ 21.8.1957 “திராவிடர் இயக்கத்துக்கு முக்கியக் கொள்கை இந்நாட்டில் பறையன் என்றும், பார்ப்பான் என்றும், உயர்ந்த சாதிக்காரன், தாழ்ந்த சாதிக் காரன் என்றிருப்பதையும், சூத்திரன், பஞ்சமன் என்றிருப்பதையும் அறவே ஒழித்து, எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் ஒரே சமுதாய மக்கள் என்னும் கொள்கைகளை நடைமுறையில் செய்வதே ஆகும்.” – ‘விடுதலை’ 8.7.1947 கட்சி – இயக்கம் “கட்சி எனப்படுவது குறிப்பிட்ட, அதாவது சில உத்தியோகங்களை அல்லது பட்டங் களை மக்களுக்கு வாங்கித் தருவது; ஓரளவு மக்களுக்கு நன்மை பயக்க முயற்சிப்பது. ஆனால், இயக்கம் என்பது அவ்வாறல்ல; மக்களின் நிரந்தர உரிமைக்கும் வாழ்க்கையின் நலனுக்கும் ஏற்ற வகையில் உழைத்து ஆவன செய்வது. இன்னுங் கூற வேண்டு...