Tagged: திராவிட இயக்கம்

புள்ளி விவரங்களுடன் வழக்கறிஞர் துரைசாமி விளக்கம்: வரலாற்றுப் போக்கை மாற்றியமைத்த திராவிடர் இயக்கம்

புள்ளி விவரங்களுடன் வழக்கறிஞர் துரைசாமி விளக்கம்: வரலாற்றுப் போக்கை மாற்றியமைத்த திராவிடர் இயக்கம்

திராவிடர் இயக்கம் வந்த பிறகு தான் தமிழன் தலைநிமிர்ந்தான்; தன்மானம் பெற்றான் என்று வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, வரலாறுகளை சுட்டிக்காட்டி உரையாற்றினார். 24.3.2012 அன்று பெரம்பூர் ராஜலட்சுமி அரங்கில் ‘குடிஅரசு’ வாசகர் வட்ட தொடக்க விழாவில் அவர் ஆற்றிய உரையின் தொடர்ச்சி: 1925 ஆம் ஆண்டு பெரியார் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியே வந்தார். இவ்வியக்கம் ஆரம்ப காலத்தில் நம் நிலை எப்படி இருந்தது? ஹிட்லர், ஜெர்மன், யூதர்களிடம் கொண் டுள்ள மனப்பான்மைக்குக் காரணங்கள் என்ன வென்று அவர் சொல்லுகின்றாரோ, அவைகளும், அவைகளுக்கு மேற்பட்ட காரணங்களுமே இங்கே நம் மாபெருந்தலைவர்கள் இவ்வியக்கத்தை ஆரம்பிப்பதற்குக் காரணங்களாயிருந்தன. கல்வி 1915 ஆம் ஆண்டில், நம் இயக்கம் ஆரம்பிக்கப்படு முன் கல்வித் துறையில் பார்ப்பனரல்லாத மக்கள் எந்நிலையிலிருந்தார்கள் என்பதைச் சிறிது கவனிப் போம். கல்வித் துறை நிர்வாகத்தில் மொத்தம் 518 பதவி களில் 400 பதவிகள் பார்ப்பனர்கள் கையிலிருந்தன. 73 பதவிகளை ஆங்கிலே இந்தியர்கள், யூரேஷியர்கள், கிறிஸ்தவர்...