Tagged: திராவிடர் இயக்கம்

அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் வழக்கறிஞர் துரைசாமி விளக்கம்: நீதிக்கட்சி ஆட்சியின் சமூக நீதி சாதனைகள்

அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் வழக்கறிஞர் துரைசாமி விளக்கம்: நீதிக்கட்சி ஆட்சியின் சமூக நீதி சாதனைகள்

திராவிடர் இயக்கம் வந்த பிறகு தான் தமிழன் தலைநிமிர்ந்தான்; தன்மானம் பெற்றான் என்று வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, வரலாறுகளை சுட்டிக்காட்டி உரையாற்றினார். 24.3.2012 அன்று பெரம்பூர் ராஜலட்சுமி அரங்கில் ‘குடிஅரசு’ வாசகர் வட்ட தொடக்க விழாவில் அவர் ஆற்றிய உரையின் தொடர்ச்சி: நீதிக்கட்சித் தலைவர் சர். பிட்டி. தியாகராயர், சென்னை மாநகர மேயராக இருந்தபோதுதான் முதன் முதலாக பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. நீதிக்கட்சித் தலைவர் சர். பிட்டி.தியாகராயர், சென்னை மாநகர மேயராக இருந்தபோதுதான் சென்னை மாநகரில் கட்டாய ஆரம்பக் கல்வியும், பார்வையற்றோர் பள்ளியும், பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லமும் உருவாக்கப்பட்டது. 1921 ஆம் ஆண்டு முதன்முதலாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிட சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது நீதிக்கட்சி அரசு. 1922 ஆம் ஆண்டு வேலை வாய்ப்பில் மட்டுமின்றி பதவி உயர்விலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை இடஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டுமென நீதிக்கட்சி அரசு ஆணை பிறப்பித்தது. ஒவ்வொரு அரசுத் துறையிலும் அந்தந்த துறைகள் மூலமாகவே...