Tagged: தினமலர்

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

குஜராத் கலவரத்துக்காக எங்கள் கட்சித் தலைவர் ராஜ்நாத் முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்கவில்லை.  – பா.ஜ.க. செய்தி தொடர்பாளர்  முக்தார் அப்பாஸ் அப்படி மன்னிப்புக் கேட்டிருந்தால் அதற்காக மன்னிச்சுடுங்கன்னு சொல்ல வர்ரீங்களா… அந்தமான் சிறையிலே அடைக்கப்பட்டிருந்தார் பகத்சிங்.  – அகமதாபாத்தில் மோடி பேச்சு மோடிஜி! பகத்சிங் இருந்தது டில்லி சிறை; அந்தமான் சிறையிலிருந்தது வி.டி. சவர்க்கார். அட விடுங்கப்பா; ஏதோ ஒரு சிறை என்கிறீர்களா? ஹி…. ஹி…. அய்.நா.வில் அமெரிக்க தீர்மானத்தை பார்ப்பன ஊடகங்களும் ‘அசல் திராவிடர் இயக்கமும்’ சேர்ந்து ஆதரிக்கின்றன.  – ‘தமிழ்நெட்’ இணையதளம் இப்படியும் கூறலாமே! அதே தீர்மானத்தை ‘அசல் தமிழ் ஈழம்’ பேசும் ‘தமிழ் நெட்’டும் இராஜபக்சேவுடன் சேர்ந்து கொண்டு எதிர்க்கிறது. சென்னை ‘பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு’ அரசு மருத்துவமனiயிலிருந்து சிறப்பு மருத்துவர்கள் மாற்றப்பட்டு விட்டதால் அரசு மருத்துவமனைகளில் பணிகள் பாதிப்பு.  ‘தினமலர்’ செய்தி விடுங்க…. பொது மருத்துவமனைகளை எல்லாம் அரசு செயலகங்களாக மாற்றி அம்மா அறிவிச்சுடுவாங்க! ஓட்டுக்கு பணம் வாங்காதீர்...