Tagged: தினத்தந்தி

உடுமலை சங்கர் படுகொலை – கழகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தினத்தந்தி 05042016

”ஜாதி மறுப்பு இணையர்களுக்கு பாதுகாப்பு கோரி தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற்றார் கொளத்தூர் மணி” என கழக தலைவர் குறித்து உண்மைக்கு புறம்பான செய்தியை சில தொலைக்காட்சிகளும்,அதனை ஒட்டி சில முகநூல் ஜாதிவெறி பதிவர்களும் பதிவு செய்கிறார்கள் என அறிகிறோம். அந்த வழக்கின் உண்மை நிலை குறித்து தோழர்கள் அறிந்து கொள்ளவேண்டும் என இந்த சிறு விளக்கத்தை அளிக்கிறோம். கழகத்தின் சார்பில் சென்னைஉயர் நீதி மன்றத்தில் ஜாதி ஆணவ படுகொலைகளை ஒட்டி வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அவ்வழக்கின் விவரம் : 1)ஜாதி மறுப்பு இணையருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். ஏற்கனவே இதுகுறித்து உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில் (லதாசிங் (உ.பி),ஆறுமுக சேர்வை (தமிழ்நாடு))வழங்கியுள்ள தீர்ப்பில் உள்ள வழிகாட்டுதல்களை தமிழக அரசு உடனே அமுல் படுத்த வேண்டும். ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட உடுமைப்பேட்டை சங்கர்-கெளசல்யா இணையர் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என காவல்துறையை அணுகி பலமுறை மனு கொடுத்திருந்தும் அவர்களுக்கு...

இதுதான் பத்திரிகை நீதியா?

இதுதான் பத்திரிகை நீதியா?

‘தினத்தந்தி’ நாளேடு ‘சேரி’ இருக்க வேண்டும் என்று வெளிப்படையாக நியாயப்படுத்துகிறதா? ஒரு காலத்தில் இதே தீண்டாமைக்கு உள்ளாக் கப்பட்டிருந்த சமூகத்தைச் சார்ந்தவர்கள் நடத்தும் நாளேடு, இப்படி ஒரு செய்தியை வெளியிட லாமா? வன்மையாகக் கண்டிக்கிறோம். பெரியார் முழக்கம் 17122015 இதழ்