தலையங்கம் மதவெறிக்கு எதிராக விஞ்ஞானிகள் – படைப்பாளிகள்
மோடியின் பார்ப்பனிய மத ஆட்சி -குறுகிய காலத்திலேயே பின்னடைவுகளை சந்திக்கத் தொடங்கி விட்டது. மக்களாட்சி முறையைப் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள் – அந்தக் கட்டமைப்புக்குள் மதவெறி ஆட்சியை நிறுவிட முயலும் முயற்சிகளும் அதற்கான வெறுப்புப் பேச்சுகளும் உலகம் முழுதும் கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது. சுமார் 40 எழுத்தாளர்கள், கலைஞர்கள் தங்களின் கலை படைப்புகளுக்காக கிடைத்த விருதுகளை திருப்பி அளித்து எதிர்ப்புகளைப் பதிவு செய்துள்ளனர். மதரீதியாக மக்களை பிளவுபடுத்துவது அணுகுண்டைவிட ஆபத்தானது என்று 120 விஞ்ஞானிகள் கூட்டாக கையெழுத்திட்டு குடியரசுத் தலைவருக்கு மனு அளித்துள்ளனர். உயிரியல் துறையின் தலைசிறந்த விஞ்ஞானியும், ‘தேசிய அறிவு ஆணையம்’ என்ற அமைப்பில் தலைவராக இருந்தவருமான ‘பத்மபூஷன்’ விருது பெற்ற பி.எம். பார்கவா, தனது விருதை திருப்பி அனுப்பிவிட்டார். “இந்த அரசுக்கு சகிப்புத் தன்மை இல்லை; பகுத்தறிவு மீதும் அறிவியல் மீதும் தாக்குதலை நடத்துகிறது” என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். “மதத்தை அரசியலோடு கலக்கக் கூடாது. நம்பிக்கைகள் வீட்டிற்குள்ளேயே...