தலையங்கம் இராமானுஜர் ஆயிரம் ஆண்டு விழா கொண்டாடுவோரே – பதில் கூறுங்கள்!
பிறப்பால் பார்ப்பனரான வைணவ மதப் பிரிவைச் சார்ந்த இராமானுஜரின் ஆயிரமா வது ஆண்டு விழா இப்போது கொண் டாடப்பட்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ். – சங் பரிவாரங்கள் – வைணவப் பார்ப்பனர்கள் – இராமானுஜருக்கு விழா எடுக்கிறார்கள். ஆனால் இராமானுஜர் முன் வைத்த கருத்து களை இவர்கள் பின்பற்று கிறார்களா? இராமானுஜர், பாரதியைப் போல் ஒடுக்கப்பட்ட ஜாதியினரும் ‘பூணூல்’ அணிந்து, ‘பிரம்மத்தை’ அடையலாம்; ‘பிராமணர் என்பது பிறப்பால் வருவது அல்ல’ என்று கூறிய ஒரு சீர்திருத்தவாதி. 3 சதவீத பார்ப்பனர்கள், தங்கள் பிறவி மேலாண்மையின் அடையாளமாக அணியும் பூணூலை மற்றவர்களுக்கு அணியச் சொல்வதைவிட பிறவி அகங்காரத்தை வெளிப்படுத்தும் பூணூலை பார்ப்பனர்களே ஏன் கழற்றி வீசக் கூடாது என்பதுதான் பெரியார் இயக்கம் முன் வைத்த கேள்வி. அரிசியில் கல் கலந்துவிட்ட நிலையில் கல்லைப் பொறுக்கி, அரிசியைத் தூய்மைப்படுத்த வேண்டுமே தவிர, அதைச் செய்யாது, அரிசிகளை பொறுக்கிக் கொண்டிருப்பது அறிவுடைமையாகுமா என்று பெரியார் கேட்டார். இத்தகைய...