Tagged: ‘தலித் முரசு’ ஆசிரியர்

மக்களைக் கூறுபோடும் செயல் திட்டமே பார்ப்பனியம் மக்கள் ஒற்றுமையை உருவாக்கும் வரலாறுகள் எழுதப்படவேண்டும் – ‘தலித் முரசு’ ஆசிரியர் புனித பாண்டியன் பேச்சு

மக்களைக் கூறுபோடும் செயல் திட்டமே பார்ப்பனியம் மக்கள் ஒற்றுமையை உருவாக்கும் வரலாறுகள் எழுதப்படவேண்டும் – ‘தலித் முரசு’ ஆசிரியர் புனித பாண்டியன் பேச்சு

“பார்ப்பனியத்தால் பிரிக்கப்பட்ட மக்களின் ஒற்றுமைகளை வலியுறுத்தும் வரலாறுகள் எழுதப்பட வேண்டும் என்று ‘தலித் முரசு’ ஆசிரியர் புனித பாண்டியன் வலியுறுத்தினார். திராவிடர் விடுதலைக்கழகம், அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 137வது பிறந்தநாள் விழா கருத்தரங்கம் மற்றும் தஞ்சை பசு.கௌதமன் எழுதிய இந்து மதத்தில் அம்பேத்கரும் பெரியாரும் என்ற புத்தகத்தின் நூல் திறனாய்வு மன்னார்குடி சிட்டி ஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திராவிடர் விடுதலைக்கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு தலைமை வகித்தார். நீடாமங்கலம் ஒன்றிய அமைப்பாளர் செந்தமிழன் வரவேற்றார். தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம், முன்னாள் அமைப்பாளர் பாரி, புதுக்கோட்டை மாவட்ட அமைப்பாளர் பூபதி கார்த்திகேயன், தமிழ்நாடு அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர் முரளி சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துவக்கத்தில், இந்துத்துவ மதவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட பகுத்தறிவு எழுத்தாளர்கள் நரேந்திர தபோல்கர், பேராசிரியர் கல்பர்கி ஆகியோரின் படங்களை திறந்து வைத்து அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட செயலாளர் சேரன்குளம் செந்தில்குமார்,...