Tagged: தமிழ் மன்னர்கள்

‘மனுதர்ம’த்தில் மண்டியிட்ட மானமற்ற தமிழ் மன்னர்கள்

‘மனுதர்ம’த்தில் மண்டியிட்ட மானமற்ற தமிழ் மன்னர்கள்

தமிழ் மன்னர்கள் நடத்தியது மனுதர்ம அடிப்படை யிலான பார்ப்பன ஆட்சியே என்பதையும் மனு சாஸ்திரம் எரிக்கப்படவேண்டும் என்றும் மறைந்த பெரியாரியலாளர் வழக்கறிஞர் கரூர் பூ.அர. குப்புசாமி எழுதிய கட்டுரையை இன்றைய பொருத்தம் கருதி வெளியிடுகிறோம். அவர் 1985 இல் வெளியிட்ட ‘மன்னர்களும் மனுதர்மம்’ நூலில் இக்கட்டுரை இடம் பெற்றுள்ளது. நம் அப்பாவி மக்கள் ஏதோ மறைந்துபோன ஒரு நூலை – மனுதர்மத்தை – ஏன் இப்போது கொளுத்த வேண்டும் என்பதாக நினைக்கக்கூடும். ஆனால், இன்றைய சமூக அமைப்பு, நடை முறைகள், நம்பிக்கைகள், நல்லது கெட்டது பற்றிய உணர்வு, ஏன் ஊர் அமைப்புக்கூட தர்மசாத்திரங்கள் என்று சொல்லப்பட்ட பார்ப்பனிய ஏற்பாடுகளின் படி நாடாண்ட மன்னர்கள் பல நூற்றாண்டு கால மாக சமூகத்தின் மீது பலாத்காரமாகத் திணித்து நிலை நாட்டியவை என்பதை அவர்கள் அறிய மாட் டார்கள். நிலைநாட்டிவிட்ட பிறகு அவை இன்று இயல்பாகத் தோன்றுகின்றன – அவ்வளவு தான். சாமான்ய மக்கள்கூட ‘மனுநீதி...

‘மனுதர்ம’த்தில் மண்டியிட்ட மானமற்ற தமிழ் மன்னர்கள் (2)

‘மனுதர்ம’த்தில் மண்டியிட்ட மானமற்ற தமிழ் மன்னர்கள் (2)

தமிழ் மன்னர்கள் நடத்தியது மனுதர்ம அடிப்படையிலான பார்ப்பன ஆட்சியே என்பதையும் மனுசாஸ்திரம் எரிக்கப்பட வேண்டும் என்றும் மறைந்த பெரியாரிய லாளர் வழக்கறிஞர் கரூர் பூ.அர. குப்புசாமி எழுதிய கட்டுரையை இன்றைய பொருத்தம் கருதி வெளியிடுகிறோம். அவர் 1985 இல் வெளியிட்ட ‘மன்னர்களும் மனுதர்மம்’ நூலில் இக்கட்டுரை இடம் பெற்றுள்ளது.  சென்ற இதழ் தொடர்ச்சி. கிராமம் ஊழியம் செய்யும் வகுப்பார்கள் யாரும் ஊரை விட்டு போகக் கூடாது. போனால் அவர்கள் மீது நடவடிக்கை உண்டு. சாதி ஆச்சாரங்களை வரையறுத்து இன்ன வகுப்பார் இன்னின்ன சடங்குகள், உடைகள், உரிமைகள் ஆகியவைகளைத் தான் கைக்கொள்ள வேண்டும் என (களப் பிரர் ஆட்சியில்) அரசாணை பிறப்பித்தனர். அந்த ஆணையும் சாத்திர வல்லுனரான பார்ப்பனர்களின் அபிப்பிராயப்படியே வழங்கப்பட்டது. உதாரணமாக அய்ந்து வகைப்பட்ட கம்மாளர்களை அவர்கள் பிரதிலே மாகளைக் காட்டிலும் உயர்ந்தவர் களான அனுலோமரைச் சேர்ந்தவர்கள் என்றும், எனவே அவர்கள் பூணூல் அணிந்து கொள்ளலாம் என்றும் ஆனால் உபநயன மந்திரம்...