வேளாண் கடனையும்,கல்விக்கடனையும் விலக்கிக்கொள்ள வலியுறுத்தி தெருமுனைக் கூட்டம்.
பேராவூரணி ஜூலை 26. பேராவூரணி அருகில் ரெட்டவயல் கடைத்தெருவில் வேளாண் கடனையும்,கல்விக்கடனையும் விலக்கிக்கொள்ள வலியுறுத்தி தமிழக மக்கள் புரட்சிக் கழகம் சார்பில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. வீரக்குடி ராசா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழக மற்றும் இந்திய அரசுகள் மாணவர்களின் கல்விக் கடனை உடனே விலக்கிக்கொள்ள வேண்டும், வங்கிகள் அளித்த கடனை வசூலிக்கும் உரிமையை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் போக்கை நிறுத்திக்கொள்ள வேண்டும், வியாபார நோக்கில் செயல்படும் தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் அரசே ஏற்று நடத்த வேண்டும், தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை இலவயமாகக் கல்வியை வழங்க வேண்டும், கல்விக் கடன் என்ற பெயரில் தனியார் கல்வி நிறுவனங்களை வளர்க்கும் போக்கை அரசு கைவிட வேண்டும், தனியார் பன்னாட்டு நிறுவனங்களின் வேளாண் வாகனங்களை விற்பனை செய்திட வேளாண் கடன்களைக் கொடுத்துவிட்டு உழவர்களைக் கடனாளியாக்கும் போக்கை அரசு கைவிட வேண்டும், வேளாண் உற்பத்திக்குத் தேவையான அனைத்துச் செலவினங்களையும் அரசே மானியமாக வழங்கி வேளாண் உற்பத்தியைப் பெருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்...