Tagged: டாஸ்மாக்

மயிலாப்பூர் செயின்ட் மேரீஸ் டாஸ்மார்க் கடையை அகற்றக் கோரி முற்றுகைப் போராட்டம்

மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் செயின்ட் மேரீஸ் பாலத்திலுள்ள டாஸ்மார்க் கடையை அகற்றக் கோரி சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் அந்த பகுதி பொது மக்களை திரட்டி முற்றுகை போராட்டம் நடத்தியது. தோழர்களுடன் பொது மக்களையும் காவல்துறை கைது செய்து மண்டபத்தில் அடைத்தது. தொடர்ந்து ஐந்தாண்டுகளில் நான்காவது முறையாக பெரும் முற்றுகை போராட்டத்தை மயிலை பகுதி தோழர்களுடன் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தியுள்ளது. அரசு செவிசாய்த்து கடையை நீக்கும் வரை போராட்டங்கள் ஓயாது. மாவட்ட செயலாளர் தோழர் இரா.உமாபதி பத்திரிகையாளர்களை சந்தித்து கோரிக்கையை செய்தியாக வைத்தார். பகுதி பொதுமக்களும் தன் மனக்குமுறல்களை பத்திரிகையாளர்களிடம் கொட்டித் தீர்த்தனர். பெண்களும் கைதாகியது தோழர்க ளை மேலும் இந்த போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட வழிசெய்தது… தற்போது கைதாகி மண்டபத்தில் … திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம்

வாழ்வுரிமைக் கட்சியினர் மீது தாக்குதல்: கழகம் கண்டனம்

வாழ்வுரிமைக் கட்சியினர் மீது தாக்குதல்: கழகம் கண்டனம்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை: தாமிரபரணி ஆற்றின் நீரை உறிஞ்சி விற்பனை செய்யும் பன்னாட்டு குளிர்பான ஆலையை மூடக்கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நடத்தப்பட்ட காவல்துறையினரின் தாக்குதலில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் உள்பட பலர் கொடுங்காயம் அடைந்துள்ளனர். காவல்துறை யின் இந்த ஜனநாயக விரோதப் போக்கை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. பொதுவாக பொதுமக்கள் குடிநீர் பிரச்சனைக் காகவோ, போக்குவரத்து வசதிகளுக்காகவோ, சுகாதாரச் சீர்கேடுகளுக்காகவோ, குடிமைப் பொருட் களுக்காகவோ போராட்டம் நடத்தினால் அதற்குரிய அதிகாரிகள் தான் வந்து பேசி சமரசம் செய்வார்கள். ஆனால் கடந்த 10-15 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் எந்தவிதமான போராட்டங்களாக இருந்தாலும் காவல்துறை மட்டுமே வந்து மக்களிடம் பேசுவதும் போராட்டக்காரர்கள் மீது வன்முறையினை நிகழ்த்து வதும் தொடர்கதையாகி வருகிறது. இதை தமிழகத்தை ஆளும்கட்சிகள் கண்டும் காணாமல் இருப்பதால் காவல்துறையின் அத்துமீறல் அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழக மக்களின் உரிமைக்காக தமிழகத்தின்...