Tagged: ஞான பீட விருது

இருவர் தூக்கிலிடுவதை தடுத்து நிறுத்திய மகேஸ்வேதா தேவி : 90ஆம் வயதில் முடிவெய்தினார்

பழங்குடி மக்களுக்காக போராடியவரும், அவர்கள் வாழ்க்கை பார்ப்பன உயர் ஜாதியினர் திணித்த மூடநம்பிக்கைகளால் எப்படி சுரண்டப்படுகிறது என்பதை இலக்கியங்களாக எழுதி குவித்தவருமான மகேஸ் வேதாதேவி 90 ஆம் வயதில் கொல்கத்தாவில் முடிவெய்தினார். 120 நூல்களை அவர் எழுதியுள்ளார். ஞானபீடம் ‘பத்மவிபூஷன்’ உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றவர். ஆந்திர மாநிலத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு இளைஞர்களின் தூக்குத் தண்டனையை நிறுத்திய பெருமை இவருக்கு உண்டு. குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவிடம், அவர் ‘ஞான பீட விருது’ பெறும் நிகழ்ச்சிக்கு அடுத்த நாள் விடியற்காலை ஆந்திர மாநிலம் இராஜமுந்திரி சிறையில் இரு இளைஞர்கள் தூக்கிலிட நேரம் குறிக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே அவர்களின் கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. இந்த நிலையில் ‘ஞான பீட விருது’ பெறும் மேடையில் விருதைப் பெறுவதற்கு முன் குடியரசுத் தலைவரிடம் ஒரு கோரிக்கை மனுவை திடீரென வழங்கினார், மகேஸ்வேதா தேவி. அடுத்த நாள் விடியற்காலைதூக்கிலிடப்படவிருக்கும் இரு இளைஞர்களின் தூக்குத் தண்டனையை...