Tagged: ஜிக்னேஷ் மேவானி

குஜராத்தின் சாதி ஒழிப்பு இளம் போராளி மேவானி பேட்டி

 “பெரியார் போன்ற தீரர்களைப் பெற்றதற்கு பெருமைப்படவேண்டும்!” பெரியாரின் தாக்கம் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தை சமூக நீதித் தளத்தில் ஒரு படி மேலேதான் நிறுத்தியுள்ளது. சாதி என்பது உழைப்புச் சக்தியை மட்டுமல்ல, உழைப்பாளர்களையும் பிளவுபடுத்துகிறது. ஜிக்னேஷ் மேவானி குஜராத் மக்களின் மனங்களில் ஆழ, அகல பதிந்துவிட்ட ஒரு பெயர். செத்த மாட்டை சுத்தம் செய்ய மாட்டோம், ‘மாட்டின் வாலை நீங்கள் வைத்துக் கொண்டு 5 ஏக்கர் நிலத்தை எங்களுக்கு கொடுங்கள்’ என்று குஜராத்தின் உனாவில் லட்சக்கணக்கான தலித் மக்களை ஒன்று திரட்டிய எழுச்சியின் நாயகன். சென்னையில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்த நாள் சொற்பொழிவில் கலந்து கொள்ள வந்திருந்த அவர் அளித்த பேட்டி: குஜராத்தில் பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக உனாவில் மிகப்பெரிய எழுச்சியை நீங்கள் நடத்தி யிருந்தீர்கள், இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவு என்று பேசப்பட்டது, ஆனால் அதன் பின்னர் நடந்த உ.பி. தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதே, உத்தரப் பிரதேசத்தில்...