Tagged: ஜாதி கலவரம்

ஜாதி கலவரங்களை தூண்டும் பேச்சு மதுரை திவிக மனு 04012017

கல்வி, பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கியுள்ள தேவர் சமூக மக்களை முன்னேற்றாமல், அவர்களை மூளை சலவை செய்து வன்முறையாளர்களாக மாற்றும் விதமாகவும், இரு தரப்பினரிடையே ஜாதி கலவரங்களை தூண்டும் விதமாகவும், பட்டியலின மக்களை கொலை செய்யம் படியும், இழிவுபடுத்தியும் பேசிய. -தமிழ் நாடு தேவர் பேரவை தலைவர். முத்தையா என்பவரை கைது செய்யக் கோரியும், இது போன்ற வன்மம் கக்கும் ஜாதி சங்கங்களை தடை செய்ய கோரியும் மதுரை திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பிலும், புரட்சிகர இளைஞர் கழகம் சார்பிலும் மதுரை காவல் ஆணையாளர் அவர்களிடம் புகார் மனு 04012017 அன்று மாலை 5 மணிக்கு தோழர் மணிகண்டன் அவர்களால் அளிக்கப்பட்டது. உடன் புரட்சிப் புலிகள் மாவட்ட நிர்வாகிகள் பீமாராவ், அகிலன், ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சிதம்பரம், திவிக மாநகர் பொறுப்பாளர் காமாட்சி ஆகியோர் கலந்து கொண்டனர். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் உறுதியளித்துள்ளனர்.