Tagged: ஜாதி ஒழிப்பு நாள்

ஜாதி ஒழிப்பு நாள் ! 1956 நவம்பர் 26 – துண்டறிக்கை

ஜாதி ஒழிப்பு நாள் ! 1956 நவம்பர் 26 – துண்டறிக்கை

(துண்டறிக்கை அச்சிட தோழர்கள் இக்கட்டுரையை பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம்.) ஜாதி ஒழிப்பு நாள் ! 1957 நவம்பர் 26 3000 தோழர்கள் சிறையில் வாடிய மகத்தான வரலாறு. 1957 நவம்பர் 26இல் பெரியார் இயக்கம் ஜாதி ஒழிப்புக்காக சட்டத்தை எரித்த நாள். 3000 தோழர்கள் 6 மாதம் முதல் 3 ஆண்டு வரை சிறைத் தண்டனை பெற்றனர். அந்த நாள் நினைவாக சில வரலாற்றுக் குறிப்புகள். இன்றைக்கும் போர் வீரர்களின் நினைவுக் கல்வெட்டுகளில் அவர்களுடைய பெயர்கள் தெரியாத காரணத்தால் ‘பெயர் தெரியாமல் மரித்துப் போன போர்வீரர்கள்’ என்று எழுதப்படுவது வழக்கம். அதேபோல்பெரியார் நடத்திய ஜாதி ஒழிப்புக்கான அரசியல் சட்டஎரிப்புப் போரில் பங்கேற்று மாதக் கணக்கில் சிறைக்கொடுமைகளை அனுபவித்த பெயர் தெரியாத தோழர்கள்பலர் உண்டு. சட்ட எரிப்புப் போரில் பங்கேற்ற பெரியாரின் கருஞ்சட்டைத் தொண்டர்களின் உறுதிமிக்க தியாக வரலாற்றிலிருந்து சில செய்திகள்: • சிறையிலிருந்த தோழர் திருவாரூர் முத்துகிருட்டிணனின்மனைவிதான் அவரது கடையையும் குழந்தைகளையும் கவனித்துக் கொண்டார். காலராவினால் திடீரென முத்துகிருட்டிணன் மனைவி இறந்து...