‘ஜாட்’ சமூகத்தினரின் மிரட்டலுக்கு மண்டியிடும் ஆட்சியாளர்கள்
அரசியலில் பொருளாதாரத்தில் வலிமையாகத் திகழும் ‘ஜாட்’ ஜாதிப் பிரிவினர், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு கோரி நடத்தி வரும் வன்முறை வெறியாட்டத்துக்கு மாநில பா.ஜ.க. ஆட்சி பணிந்து, இடஒதுக்கீடு வழங்க முன் வந்திருக்கிறது. ஏற்கெனவே புபேந்திரசிங் ஹீடா, முதல்வராக இருந்த காங்கிரஸ் ஆட்சியில் ‘ஜாட்’ இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்பட்டு, பிறகு உச்சநீதிமன்றத்தால் இரத்து செய்யப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் ஆணை யத்தின் ஒப்புதல் பெறாமலே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதே காரணம். பிற்படுத்தப்பட்டோருக்கான மண்டல் ஆணையம், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ‘ஜாட்’ பிரிவினரை சேர்க்கவில்லை. அதற்கு நியாயமான காரணங்கள் உண்டு! மண்டல் ஆணையம் ‘பிற்படுத்தப்பட்டோரை’ ஒரு ஜாதியினரின் சமூக நிலை, கல்வி நிலை, பொருளாதார நிலைகளைக் கண்டறிந்து, அதனடிப்படையில் நிர்ணயம் செய்தது. இதற்காக அறிவியல் அடிப்படையிலான காரணிகள் தேர்வு செய்யப்பட்டன. மொத்தம் 22 காரணிகளை வரையறை செய்து, இந்த 22 காரணிகளில் (Factors) 50 சதவீதத்துக்கும் மேலாக பின் தங்கியிருந்த பிரிவினர் பிற்படுத்தப்பட்டோராக பட்டியலிட்டனர். இந்த அடிப்படையில்...