Tagged: ஜவகர்லால் நேரு

நேரு பல்கலைக் கழகத்தில்  தீட்டு கழிக்கும் சடங்காம்!

நேரு பல்கலைக் கழகத்தில் தீட்டு கழிக்கும் சடங்காம்!

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களும் பெண்களும் தடையின்றி நுழைய முடிந்தது. தேச விரோத சட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர் சங்கத் தலைவர் கன்யாகுமார் சிறையிலிருந்து பிணையில் விடுதலை பெற்று திரும்பியபோது நிகழ்த்திய உரையிலும் இதை பெருமையுடன் நினைவு கூர்ந்தார். இந்த நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம், சமூக நீதிக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிவிட்டது. இப்பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் மாணவிகளுக்கு 5 புள்ளிகள் மதிப்பெண்ணும், பிற்படுத்தப்பட்டோருக்கு 10 புள்ளிகள் மதிப்பெண்ணும் சலுகைகளாக வழங்கப்பட்டு வந்ததை பல்கலைக் கழக நிர்வாகம் திடீரென இரத்து செய்துவிட்டது. இதற்கிடையே கன்யாகுமாரும், மாணவர்களும் ‘தேச விரோத’ செயலில் ஈடுபட்டார்கள் என்றும், அதனால் பல்கலைக்கழகம் தீட்டாகிவிட்டது என்றும் ஆர்.எஸ்.எஸ். மாணவர்கள்,  பார்ப்பன புரோகிதர்களை வைத்து தீட்டு கழிக்கும் சடங்குகளை ‘ராம நவமி’ அன்று நடத்தியுள்ளனர்.   பெரியார் முழக்கம் 21042016 இதழ்

காஷ்மீரின் ‘370’ ஆவது பிரிவு உருவான வரலாறு

காஷ்மீரின் ‘370’ ஆவது பிரிவு உருவான வரலாறு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு தனி அரசியல் சட்டத்தை உருவாக்கிக் கொள்வதற்கு வழங்கப் பட்டுள்ள 370 ஆவது பிரிவை நீக்கும் நோக்கத் தோடு மோடி ஆட்சி விவாதங்களைத் தொடங்கி யிருக்கிறது. காஷ்மீர் மாநிலத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள ஜிதேந்திரசிங் பிரதமர் அலுவலக இணையமைச்சராக்கப்பட்டுள்ளார். பதவி ஏற்ற அடுத்த நாளே இந்த விவாதத்தை அவர் தொடங்கிய நிலையில், ‘370’ உருவான வரலாற்றை விளக்குகிறது இக்கட்டுரை. இந்தியாவில்தான் காஷ்மீர் இருக்கிறது. ஆனா, அது எப்படி இந்தியாவுக்குள் வந்தது என்பதை இன்றைய பெரும்பான்மையானவர்கள் அறிய மாட்டார்கள். இந்தியா சுதந்திரம் பெற்றபோது 526 சமஸ்தானங்கள் இருந்தன. இவற்றில் பெரும் பாலானவை இந்தியாவுடன் இணைந்துவிட்டன. இணைய மறுத்த ஐதராபாத் சமஸ்தானத்தை இராணுவ பலத்தால் இணைத்தார் அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல். காஷ்மீர் சமஸ்தானத்தை இந்து மன்னரான ஹரிசிங் ஆட்சி செய்து வந்தார். அங்கே உள்ள மக்களில் பெரும்பான்மையானவர்கள் இ ஸ்லாமியர்கள். இதனால் காஷ்மீர், இந்தியாவுடன் இணைவதா, பாகிஸ்தானுடன்...