”பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டத்தை நீக்கியுள்ளது மத்திய பாஜக அரசு” – ஆதாரமான ஆவணங்கள்
திராவிடர் விடுதலைக் கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அவர்கள் தினமும் வாட்ஸப் மூலம் தினமும் தொடர்ச்சியாக பல்வேறு தலைப்புகளில் செய்திகளை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் 02.04.2016 அன்று வாட்ஸப் செய்தியாக பகிர்ந்த ”பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டத்தை நீக்கியுள்ளது மத்திய பாஜக அரசு” எனும் தலைப்பிலான வாட்ஸப் செய்தி பகிரப்பட்ட குழுகள் மத்தியில் அதிர்ச்சியான செய்தியாக பரவியது.தோழர்கள் பலர் வாட்ஸப் உரையாடல்கள் மூலமாகவும் கழக தலைமைக்கு அலைபேசி வாயிலாகவும் இந்த செய்திக்கான ஆதாரமான ஆவணங்களை வழங்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே மத்திய அரசு தற்போதைய சூழலுக்கு தேவைற்றது என ரத்து செய்து மத்திய அரசின் அரசிதழில் வெளியான சட்டங்களின் பட்டியலின் ஆவண நகல், (இதில் 39வது சட்டமாக உள்ள The Hindu Succession (Amendment) Act, 2005 எனும் சட்டம்தான் ரத்து செய்யப்பட்ட பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் மத்திய அரசின் சட்ட சீர்திருத்தம் ஆகும்),1956 இந்து சொத்துரிமைச்சட்டத்தில் மத்திய அரசு 2005...