Tagged: சேலம் வேத மரபு மறுப்பு மாநாட்டு சிந்தனை

சைவத்தையும் ஆரியத்தையும் எதிர்த்தவர் வள்ளலார்

திராவிடர் விடுதலைக் கழகம் கடந்த 24.12.2016, பெரியார் நினைவு நாளன்று “திரு மூலர், வள்ளலார், பெரியார் வழியில் – வேத மரபு மறுப்பு மாநாட்டை” நடத்தியது. “வேத மரபை மறுப்போம்! வெகு மக்கள் உரிமைகளை மீட்போம்!” என்ற முழக்கத்துடன் கூட்டப்பட்ட அம்மாநாட்டில் தமிழ்ச் சூழலில் வேத மரபு மறுப்பு என்பது எத்தனை ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதை விளக்கும் பல்வேறு தலைப்புகளில் உரைகள் நிகழ்த்தப்பட்டன. திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நெறியாள்கை யில் காலையில் நடந்த கருத்தரங்கத்தில் “வள்ளலாரின் சன்மார்க்கத்தில் வேத மரபு மறுப்பு” என்ற தலைப்பில் பூங்குழலி ஆற்றிய உரையின் எழுத்து வடிவம். வள்ளலார் கடவுள் மறுப்பாளர் அல்ல. ஆனால் கடவுள் மறுப்பாளரான பெரியாரே அங்கீகரித்து பதிப்பித்துப் பரப்பக் கூடிய அளவுக்கு வள்ளலாரின் ஆறாம் திருமுறையில் என்னதான் இருந்தது என்ற கேள்வி எழுந்தது. அதைப் புரிந்து கொள்வதற்கு முன் நாம் வள்ளலார் வாழ்ந்த காலத்தின் சமயச் சூழலைப்...

தமிழர்களே புரோகித சடங்குகளை புறக்கணிப்பீர்! சேலம் மாநாட்டின் ஒற்றைத் தீர்மானம்

24-12-2016 அன்று சேலத்தில், சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக நடத்தப்பட்ட சித்தர்கள், வள்ளலார், பெரியார் அடிச்சுவட்டில் ‘வேத மரபு மறுப்பு மாநாட்டில்’  கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன்மொழிந்த ஒற்றை தீர்மானம் : வேதங்கள் – பகவத்கீதை – மனுஸ்மிருதி அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட வேத மரபு – பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தமிழரின் திருக்குறள் மரபுக்கு எதிரானதாகும். வேதங்கள் உருவான காலத்திலிருந்து அதற்கு எதிர்ப்புகளும் தோன்றி விட்டன. பார்ப்பனீயம் இந்த எதிர்ப்புகளை சாதுரியமாக வீழ்த்தியிருப்பதை வரலாறுகள் உணர்த்துகின்றன. சார்வாகர் – சமணர் – புத்தர் – சித்தர்கள் – வடலூர் வள்ளலார் போன்று பலரும் போர்க் கொடி உயர்த்தி இருக்கிறார்கள். இறுதியாக வேதமதமாகிய பார்ப்பன மதம் பிரிட்டிஷ் ஆட்சியைப் பயன்படுத்தி ‘இந்து’ என்ற வலைக்குள் வெகு மக்களை நிர்பந்தமாக  உள்ளிழுத்துக் கொண்டது. இதன் வழியாக சமூக அதிகாரங்களை தனது வசமாக்கிக் கொண்டு அதனூடாக தன்னை அரசியல் அதிகார...

பவுத்தர்களை வீழ்த்திய பார்ப்பனர்கள்

சேலம் வேத மரபு மறுப்பு மாநாட்டு சிந்தனை வேத மரபுகளை எதிர்த்தவர்களை பார்ப்பனர்கள் சூழ்ச்சிகரமாக வீழ்த்திய வரலாறு – கடந்த இரண்டு இதழ்களில் வெளி வந்தது. பவுத்தத்தை வேத மரபு வீழ்த்தியது எப்படி? ட           பவுத்தத்தை முற்றிலுமாக ஒழித்து, மீண்டும் வேதத்தை அரியணையில் ஏற்றத் துடித்தார்கள் பார்ப்பனர்கள். இதற்கு – முதலில் கடவுள் மறுப்புக் கொள்கையாளர்களின் படைப்பு இலக்கி யங்களை எல்லாம் அழித்து ஒழிக்கும் வேலையைத் துவக்கினர். குறிப்பாக நாத்திகத்தை வலியுறுத்திய லோகாயதவாதிகளின் இலக்கி யங்களை முழுமையாக மீட்கவே முடியாதவாறு அழித்து ஒழித்து விட்டனர். இந்த லோகாயதர் களின் வேத-கடவுள் மறுப்பு சிந்தனைகளை எதிர்த்தும், இகழ்ந்தும் பார்ப்பனர்கள் எழுதிய நூல்களிலிருந்து தான் துண்டுதுண்டாக லோகாயத வாதம் பற்றிய கருத்துகள் காணக் கிடக்கின்றன. இதுபற்றி பிரபல ஆய்வாளர்  பிரசாத் சட்போ பாத்யாயா இவ்வாறு கூறுகிறார்: “பிற சிந்தனை மரபுகளின் படைப்பிலக்கியங் களாவது ஓரளவுக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன. ஆனால் லோகாயதர்களின் உன்னதப் படைப் பிலக்கியங்களின்...