Tagged: சேலம் மேற்கு

கோவிந்தராசு-கீதா இணையர் மேட்டூரில் கட்டியுள்ள புதிய இல்லம் திறப்பு விழா மேட்டூர் 12022017

12-2-2017 அன்று சேலம் மேற்கு மாவட்டச் செய்லாளர் தோழர் ஸி.கோவிந்தராசு-கீதா இணையர் மேட்டூரில் கட்டியுள்ள புதிய இல்லத்தை கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் திறந்துவைத்தார். நிகழ்வின் தொடக்கத்தில் இல்லத்தின் உரிமையாளர் கோவிந்தராசு, அவரது மகள் அருள்மொழி உள்ளிட்டோரின் பறையிசையோடு நிகழ்வு தொடங்கியது. அடுத்து கொள்கைப் பாடல்கள் மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழுவினரால் பாடப்பட்டன. இந்நிகழ்விலும் தோழர் கோவிந்தராசுவும் அவரது மகள் அருள்மொழியும் கழகப் பாடல்கள் பாடப்பட்டன. அந்நிகழ்வில் இல்ல உரிமையாளர் கீதாவி அக்கா கணவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் தமிழரசு, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, வெளியீட்டு செயலாளர் கோபி இளங்கோவன், அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி உள்ளிட்ட ஏராளமான கழக தோழர்களும் கலந்துகொண்டனர்

அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா சேலம் மேற்கு

திராவிடர் விடுதலைக் கழக சேலம்  மேற்கு மாவட்ட சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் 125வது பிறந்த நாளான இன்று 14.4.16 காலை 10.00 மணியளவில் மாவட்ட செயலாளர் தோழர் சி.கோவிந்தராசு தலைமையில் கழக தோழர்கள் மேட்டூர் அச்சங்காடு பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.