Tagged: சேலம் கிழக்கு திவிக

ரோகித் வெமுலா – ஆர்ப்பாட்டம் – சேலம் கிழக்கு புகைப்படங்கள்

ரோகித் வெமுலாவின் மரணத்திற்கு நீதி கேட்டு திங்களன்று 01022016 மாலை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சேலம் கிழக்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தமிழ்நாடு மாணவர் கழகம் இணைந்து நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழக கிழக்கு மாவட்டத் தலைவர் தோழர் க. சக்திவேல் அவர்கள் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தோழர் இரா, டேவிட். மாவட்ட பொருளாளர் தோழர் ஏற்காடு பெருமாள் மற்றும் தமிழ்நாடு மாணவர் கழக பா. முருகன் ஆகியோர் முன்னிலை வகிக்க, இக்கண்டன ஆர்பாட்டத்தில் ஒத்த கருத்துடைய தோழமை அமைப்புகளான மதிமுக வின் மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் அ. ஆனந்தராஜ, தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சியின் தலைவர் பூமொழி, தபெதிக வின் மாவட்டச் செயலாளர் கு.தங்கராசு, ஆதி தமிழர் பேரவையின் மாவட்டச் செயலாளர் க. இராதாகிருட்டிணன். CPI ன் மாவாட்டச் செயலாளர், A. மோகன். விடுதலை சிறுத்தைகளின் மாநில தொண்டரணி துணைச் செயலாளர்...